குக் வித் கோமாளி செட்டில் நடந்த சம்பவம்.. பிரியங்கா செய்த பாலிட்டிக்ஸ்..மணிமேகலை பளீச்!
சென்னை: குக் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இது குறித்து மணிமேகலை விளக்கமாக வீடியோ தனது யூடியூப் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், 2009 ஆண்டு நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போதே சன் மியூசிக்கில் வேலை பார்த்தேன். அப்போது எனக்கு 17 வயசு தான். அப்போதிலிருந்து இப்போ வரை சுமார் 15 ஆண்டுகள் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். கடந்த 4 ஆண்டுகளாக குக் வித் கோமாளியில் பணியாற்றினேன். முதல் 3 சீசனில் கோமாளியாகவும், கடந்த 2 சீசன்களாக தொகுப்பாளினியாகவும் பணியாற்றி இருக்கிறேன்

மணிமேகலை: ஆனால், இந்த சீசனில் நான் தொகுப்பாளினியாக நுழைந்த நாள் முதலில் இருந்து நேற்று வெளியேறிய நாள் வரை நிறைய பிரச்சனை சந்தித்து விட்டேன். நான் பேசுவதை தாண்டி எனக்கு தான் எல்லாமே தெரியும், நான் இந்த சேனலில் பெரிய தொகுப்பாளினி , நான் இதை பார்த்துக் கொள்கிறேன் என என்னுடைய வேலையில் மூக்கை நுழைத்தார்.அதையும்நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால் அதையும் மீறி நம்முடைய வேலையில் தலையிடுகிறார்கள் என்றால் அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியவில்லை.
அவசியம் இல்லை: இதனால், அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரிடம் இதுகுறித்து பேசினேன் அவர், அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை, நான் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போது பாதியில் வெளிலேயே வந்ததால், என்னை அவரிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள். செய்யாத தவறுக்காக நான் என் மன்னிப்பு கேட்க வேண்டும், அப்படி கேட்டால், இன்னும் பல ஷோக்கு என்னை தொகுப்பாளினியாக்குவதாக கூறினார்கள். ஆனால், எனக்கு தன்மானம் தான் முக்கியம் என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். எனக்கு அப்படி ஒரு வேலையே வேணாம்.
யார் பொழப்பையும் கெடுக்க வேண்டாம்: நான் திறமை இல்லாதவள் இல்லை, எனக்கு திறமை இருக்கிறது. அப்படி வேலை கிடைக்கவில்லை என்றாலும் நான் வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருவேன். யார் பொழப்பையும் கெடுக்காம இருந்தா, நமக்கு எல்லாமே நல்லதா கிடைக்கும்னு நம்புறவ நான். எப்படி விட்டாலும் நான் பொழச்சுப்பேன். அவங்க பொழப்பு நடத்த இதைவிட்டால் வேறு வழி தெரியாமல் இருக்கலாம் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











