அவர் மேல எனக்கு காதல் வர இதுதான் காரணம்…மணிமேகலையின் கலகலப்பான பேட்டி!
சென்னை : தொகுப்பாளினி மணிமேகலை ஹூசனை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறித்து ஒரு நேர்காணலில் கலகலப்பாக கூறியுள்ளார்.
தொகுப்பாளினி மணிமேகலை தனது இனிமையான பேச்சாலும், வெகுளித்தனமான நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை கவர்ந்தவர். இவருக்கு என்றே சோஷியல் மீடியாவில் தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த போது, இவரிடம் பாட்டு கேட்பதற்காக போன் செய்பவர்களை விட இவரிடம் பேச வேண்டும் என்ற ஆர்வத்திலேயே பல ரசிகர்கள் போன் செய்வார்கள்.

தொகுப்பாளினி மணிமேகலை
மணிமேகலை தனது திறமையால் சன் மியூசிக், சன் டிவி என அனைத்து தொலைக்காட்சிகளிலும் நட்சத்திர தொகுப்பாளினியாக வலம் வந்தார். சிரிக்க சிரிக்க பேசுவது, யாரையும் புன்படுத்தாத நகைச்சுவை உணர்வே இவரை வெற்றித் தொகுப்பாளினியாக ஆக்கியது. இவர் நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு மணிமேகலை வீட்டில் எதிர்ப்பு வந்ததால், வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

குக்வித் கோமாளியில்
அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை, ஹுசைன் இணைந்து பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். குக் வித் கோமாளி முதல் இரண்டு சீசன் முடிந்தநிலையில், மூன்றாவது சீசனிலும் கோமாளியாக கலந்து கொண்ட, மணிமேகலை திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் விலகியதற்கான காரணம் தெரியாததால், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் சண்டை என பல வதந்திகள் பரவின.

காதல் வர இதுதான் காரணம்
இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு கணவருடன் இணைந்து பேட்டி அளித்துள்ள மணிமேகலை, ஹுசைன் மீது காதல் வந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். அதில்,மொட்ட சிவா கெட்டசிவா படத்தில் வரும் ஆடலுடன் பாடலை கேட்டு ரீமிக்ஸ் பாடலில் லாரன்சுடன் சேர்ந்து இவர் சில ஸ்டெப் ஆடியிருப்பார். அந்த பாடல் சன் மியூசிக்கில் வரும் போதெல்லாம், இவரின் டான்ஸ்சைப் பார்த்து இந்த பையன் சூப்பரா ஆடுறான் என்று மனசுக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது.

அவர் மேல் க்ரஷ்
தொடர்ந்து அந்த பாடலைப் பார்த்துக்கொண்டே இருந்ததால், எப்படியாவது இவரை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் மனதிற்குள் வந்துவிட்டது. இதனால், பலரிடம் நம்பர் கேட்டேன், நம்பரும் கிடைத்துவிட்டது, அப்போது தான் இவர் பெயர் ஹூசைன் என்று சொன்னார்கள், என்னடா முஸ்லிமா இருக்காரே கால் பண்ணலாமா? வேண்டாமா? என்று ஒரு மணி நேரம் யோசித்தேன். அப்புறம் இரவு 11.10 மணிக்கு கால் பண்ணிவிட்டேன். அப்போதே என் போனில் இவருடைய பெயரை க்ரஷ் என்று சேவ் செய்து விட்டேன் என்று மணிமேகலை தனது காதல் அனுபவங்களை கலகலப்பாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











