Priyanka : விஜய் டிவி பிரியங்கா வீட்டில் ஒலிக்கப் போகும் மழலைச் சத்தம்.. குவியும் வாழ்த்துகள்!

சென்னை: சின்னத்திரையில் தனது கலகலப்பான பேச்சினாலும், சுட்டித்தனமான டைமிங் காமெடிகளினாலும் அனைவருக்கும் பிடித்த தொகுப்பாளினி எனப் பெயர் எடுத்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ரசித்துக் கொண்டே இருக்கும்படியாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பிரியங்காவின் வாழ்க்கையில், தற்போது ஒரு மிக முக்கியமான மற்றும் நெகிழ்ச்சியான புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ஆமாம் தங்கம், பிரியங்கா தேஷ்பாண்டே தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலைத் தனது ரசிகர்களுடன் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

Priyanka Deshpande instagram
Photo Credit:

மலர்ந்த காதல்: தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபரான வாசி சச்சி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இலங்கை வாழ் தமிழரான வாசி சச்சி, அங்கே ஒரு வெற்றிகரமான ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி நடத்தி வருகிறார். இலங்கையில் நடந்த ஒரு பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளினியாக பிரியங்காவை அழைத்த போதுதான், இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் தீவிரக் காதலாக மாறியது. திருமணத்திற்குப் பிறகும் பிரியங்கா தனது ஆங்கரிங் கெரியரை விட்டுவிடவில்லை. கணவர் வாசி இலங்கையில் இருப்பதால், திருமணத்திற்குப் பிறகு பிரியங்கா சென்னை, இலங்கை என இரண்டு இடங்களுக்கும் மாறி மாறிச் சென்று, தொடர்ந்து தனது கலைப்பயணத்தையும், நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

Priyanka Deshpande instagram
Photo Credit:

நிறைமாத நிலவே: இந்நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெஞ்சை நெகிழ வைக்கும் க்யூட்டான வீடியோவை வெளியிட்டு, தான் தாய்மையாகப் போகும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். அந்த வீடியோவில், பிரியங்காவும் அவரது கணவர் வாசி சச்சியும் டாடி மற்றும் மம்மி என்று எழுதப்பட்ட க்யூட்டான தொப்பிகளை அணிந்து கொண்டு செம்ம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளனர்.
அந்த வீடியோவின் பின்னணியில் "நிறைமாத நிலவே வா..." என்ற மெல்லிசைப் பாடல் ஒலிக்க, தங்களின் இந்த அழகான தருணத்தைப் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான வியூஸ்களைக் கடந்து செம்ம வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சின்னத்திரை பிரபலங்கள், சக தொகுப்பாளர்கள் மற்றும் பிரியங்காவின் தீவிர ரசிகர்கள் எனப் பலரும், வாழ்த்துகள் பிரியங்கா அக்கா எனத் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் கமெண்ட்டுகளில் அள்ளித் தெளித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X