சோறுதான் எல்லாமே.. குக் வித் கோமாளி 5 டைட்டில் வின்னரான பிரியங்கா.. வெளியிட்ட மகிழ்ச்சிப்பதிவு!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமான இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக விஜய் டிவியின் ஆங்கர் பிரியங்கா வெற்றி பெற்றுள்ளார். இது முன்னதாகவே கணிக்கப்பட்ட முடிவு தான் என்ற போதிலும் பிரியங்காவின் ஆதரவாளர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் டைட்டிலை வெற்றி கொண்டது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவினை பிரியங்கா வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.

television priyanka

குக் வித் கோமாளி 5 ஷோ: விஜய் டிவியின் முன்னணி ஷோவான குக் வித் கோமாளி நேற்றைய தினம் தன்னுடைய 5வது சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, சுஜிதா உள்ளிட்ட ஆறு போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வான நிலையில் நேற்றைய தினம் டைட்டிலை தட்டி தூக்கியுள்ளார் ஆங்கர் பிரியங்கா. இது முன்னதாகவே யூகிக்கப்பட்ட முடிவு தான் என்ற போதிலும் பிரியங்காவின் இந்த வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமான மேடையில் அவருக்கு டைட்டில் வின்னராக வெற்றிவாகை சூடப்பட்டது.

டைட்டில் வின்னர் பிரியங்கா: சில தினங்களாக வெளிநாட்டில் சுற்றுலா கொண்டாட்டத்தில் இருந்த பிரியங்கா, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார். இந்நிலையில் அவர் இந்த டைட்டிலை வெற்றி கொண்டது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சிப்பதிவை வெளியிட்டுள்ளார். இந்த போட்டியில் தான் வெற்றி பெற காரணமான அனைவருக்கும் அவர் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக கிட்சன் சூப்பர்ஸ்டார் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற முடியாத நிலையில், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றது குறித்து அவர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

பிரியங்கா மகிழ்ச்சிப்பதிவு: இந்த ஷோவிற்கு பிறகு தற்போது நடப்பன, பறப்பன, நீந்துவன என அனைத்தையும் தான் சமைப்பேன் என்று பெருமையாக கூறுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைப்பதற்கு தனக்கு சிறப்பான பயிற்சி அளித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். எந்த நேரத்தில் வந்தாலும் தன்னை உற்சாகமாக வரவேற்று அவர்கள் தனக்கு சமையலில் பயிற்சி அளித்ததாக பிரியங்கா தெரிவித்துள்ளார். வாரந்தோறும் தான் சமைக்கும் சமையலை பல நேரங்களில் தான் சுவைக்க மாட்டேன் என்றும் அவற்றை சுவைத்து அதன் குறை நிறைகளை சொன்ன நடுவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சோறுதான் முக்கியம்: சோறு தான் முக்கியம் என்று கேப்ஷனுடன் அவர் இந்த நீண்ட பதிவை இதில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நீண்ட நெடிய பயணத்தில் துணை நின்ற அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ள பிரியங்கா, தன்னுடைய குடும்பத்தினருக்கு தனித்தனியாக பெயர்களை குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இனி குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் என்ற பெருமையுடன் வருங்காலங்களிலும் ரசிகர்களுக்கு தொடர்ந்து சிறப்பான தருணங்களை ஆங்கரிங் மூலம் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

வாயை திறக்காத பிரியங்கா: குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆங்கர் மணிமேகலை விலகியிருந்தார். இதற்கு காரணமாக அவர் மறைமுகமாக பிரியங்காவை சுட்டிக்காட்டி இருந்தார். இதையொட்டி பிரியங்காவிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரியங்கா எதாவது பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மொத்தத்தில் தன்னுடைய பயணத்தில் துணை நின்றவர்களுக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்ததுடன் இந்தப் பதிவை முடித்துக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X