Don't Miss!
- Lifestyle
தவா மஸ்ரூம்
- News
"நொறுங்கும் பிளான்?".. இன்று சென்னை வருகிறார் திரௌபதி முர்மு.. அவங்க 2 பேரும் தனித்தனியா வர்றாங்களாமே
- Finance
பிளாஸ்டிக் தடை அமல்... முதல் நாளிலேயே இத்தனை கிலோ பறிமுதலா?
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Automobiles
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு
- Technology
இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விவாகரத்து சர்ச்சை.. மனம்திறந்த தொகுப்பாளர் பிரியங்கா.. ரசிகர்கள் அதிர்ச்சி!
சென்னை : விஜய் டிவியின் சிறப்பான தொகுப்பாளராக பிரியங்கா காணப்படுகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த பிக் பாஸ் சீசன் 5லும் இவர் கலந்துக் கொண்டார். ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தன்னுடைய கணவர் குறித்து எந்த தகவல்களையும் அவர் பகிர்ந்துக் கொள்ளாமல் உள்ளது ரசிகர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கேஜிஎஃப்
படத்தை
இந்தியில்
எடுத்திருந்தால்...பிரபல
டைரக்டர்
சொன்ன
பகீர்
தகவல்

விஜய் டிவி ஆங்கர்
விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக பிரியங்கா உள்ளார். விஜய் டிவியில் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசனை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தார்.

ஆங்கர் பிரியங்கா
இவரது ஆங்கரிங்கில் எப்போதுமே ஒரு குழந்தைத்தனம் இருக்கும். மாறாக சில நிகழ்ச்சிகளை மிகவும் மெச்சூர்டாகவும் வழங்குவார். தன்னுடைய நிகழ்ச்சியின் இடையில் பாடல்களை பாடி தன்னுடைய பாட்டுத் திறமையையும் இவர் வெளிப்படுத்தியுள்ளார். மிகவும் அழகான குரல் இவருக்கு காணப்படுகிறது.

பிரியங்கா காதல் திருமணம்
கடந்த 2016ல் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் பிரியங்கா. மிகவும் சிறப்பாகவே இவரது குடும்ப வாழ்க்கை சென்றது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தன்னுடைய கணவர் குறித்த எந்த விஷயத்தையும் பகிர்ந்துக் கொள்ளாமல் இருக்கிறார்.

பிரியங்கா எஸ்கேப்
தன்னுடைய கணவருடன் தான் இணைந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்த பிரியங்கா, தற்போது அதையும் விட்டுவிட்டார். சமீபத்தில் இவரது கணவர் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல், அடுத்த பதிவில் கூறுவதாக தெரிவித்து எஸ்கேப் ஆனார்.

குடும்ப வாழ்க்கையில் சிக்கல்?
பிக்பாஸ் சீசன் 5ல் பிரியங்கா பங்கேற்ற நிலையில், நிகழ்ச்சியின் பிரீஸ் டாஸ்கில் கூட அவரது கணவர் கலந்துக் கொள்ளாத நிலையில், இவர்களுக்கிடையில் சிக்கல் இருக்கலாம் என்று ரசிகர்கள் யூகித்தனர். இதனிடையே தான் அத்தையாகி விட்டதாக சமீபத்தில் தன்னுடைய தம்பியின் குழந்தை குறித்து போட்ட பதிவிலும் சிங்கிளாகவே காட்சியளித்தார்.

ரசிகர்களுக்கு பதில்
இந்நிலையில் சமீபத்தில் திருமண வாழ்க்கை குறித்த ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, நம்மை புரிந்துக் கொள்ளும் கணவர் இருந்தால், அவருக்கு நாமும் விசுவாசமாக இருந்தால் வாழ்க்கையில் அனைத்துமே சாத்தியமாகும் என்றும் கூறியுள்ளார். இந்த பதிலை அவர் விரக்தியாக பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சந்தேகத்தை தீர்ப்பாரா பிரியங்கா?
இதையடுத்து பிரியங்காவும் பிரவீனும் விவாகரத்து செய்துக் கொண்டதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். ஆனால் பிரியங்கா மட்டுமே இதை உறுதிப்படுத்த முடியும். விரைவில் இதுகுறித்து மனம் திறந்து பேசி, ரசிகர்களின் சந்தேகத்தை அவர் தீர்த்து வைப்பார் என்று நம்பலாம்.