விஜய் டிவியை விட்டு விலக முடிவெடுத்த பிரியங்கா.. கமல்ஹாசன் தான் காரணமா?

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் இன்னும் 3 நாட்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

Recommended Video

Priyanka-வின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்? அதிர்ச்சியில் ரசிகர்கள் #TV | Filmibeat Tamil

இந்தப் படத்தையொட்டி சிறப்பான பிரமோஷன்களில் ஈடுபட்டுள்ளார் கமல். டெல்லி, மும்பை, கேரளா, கோலாலம்பூர் என பறந்து பறந்து பேட்டிகளையும் பத்திரிகையாளர் சந்திப்புகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து பான் இந்தியா படத்தை எப்படி பிரமோட் செய்வது என்பதை அவரிடம் கற்க வேண்டும் என்ற கமெண்ட் எழுந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்னும் 3 நாட்களில் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையடுத்து கடந்த சில வாரங்களாகவே பிரமோஷன் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்திய அளவில் 5 மொழிகளில் விக்ரம் படம் ரிலீசாக உள்ளது. இதையடுத்து மும்பை, டெல்லி, சென்னை, கேரளா, கோலாலம்பூர் என பறந்து பறந்து பிரமோஷன் பணிகளில் கமல் மற்றும் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

100 சதவிகிதம் லோகேஷ் படம்

100 சதவிகிதம் லோகேஷ் படம்

இந்தப் படத்தை கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள நிலையில், படம் 100 சதவிகிதம் லோகேஷின் படமாக எடுக்கப்பட்டுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் கமல் மட்டுமின்றி லோகேஷும் தெரிவித்துள்ளனர். படத்தை பார்த்துவிட்டு அடிப்பொலி என்று கமல் கமெண்ட் அடித்ததாக அவரது நண்பர் தெரிவித்திருந்தார்.

சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்பு

சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்கேற்பு

இந்நிலையில், விஜய் டிவியிலும் தொகுப்பாளர் டிடிக்கு லோகேஷ் மற்றும் கமல் பேட்டியளித்திருந்தனர். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும் கமல் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் பல அரிய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இது படத்திற்கு அப்பாற்பட்ட தகவல்களாக இருந்தது.

பிரியங்கா பாடிய கமல் பாடல்

பிரியங்கா பாடிய கமல் பாடல்

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கமலின் அழகான பாடல்கள் பலவற்றை பாடி ஜூனியர்கள் அசத்தினர். இதை மிகவும் ஆர்வத்துடன் கமல் ரசித்தார். தொடர்ந்து தொகுப்பாளர் பிரியங்காவும் Who is the hero என்ற மன்மதன் அம்பு படப்பாடலை பாடி அசத்தினார். அவருக்குள் இப்படி ஒரு திறமையா என்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கமல் விளக்கம்

கமல் விளக்கம்

இதையடுத்து அவரை பாராட்டிய கமல் விஜய் டிவியை விட்டு போனாலும் திரும்ப வரலாம் என்றும் தானும் தற்போது அப்படித்தான் வந்ததாகவும் கூறினார். அவர் முன்னதாக பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து விலகியதை குறிப்பிட்டு அவ்வாறு பேசினார். தொடர்ந்து பிரியங்காவிற்கு பாடகி சித்ரா உள்ளிட்ட அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X