பிரியங்காவோட பர்சனல் விஷயங்களை கேவலமாக பேசுவதற்கு வேறு பொழைப்பு பொழைக்கலாம்.. ஆங்கர் ரஞ்சித் ஆவேசம்!

சென்னை: விஜய் டிவியின் மணிமேகலை -பிரியங்கா விவகாரம் ஒரு முடிவே இல்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த விஷயத்தில் தனக்கு சுய மரியாதை மறுக்கப்பட்ட இடத்தில் தான் தொடர விரும்பவில்லை என்று மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார். இதன்மூலம் அவர் சேனலில் இருந்து விலகியுள்ளார்.

இதனிடையே, இந்த விஷயத்தில் சேனல் தரப்பிலோ, பிரியங்கா தரப்பிலோ விளக்கம் கொடுக்கப்பட்டாலோ அல்லது இதுகுறித்த வீடியோ வெளியிடப்பட்டாலோ மட்டுமே இந்த விஷயத்தில் அனைவரும் சமாதானமடைவார்கள் என்று செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதுவரை இந்த விஷயத்தில் பலரும் கருத்துக்களை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

television ranjith cwc show

குக் வித் கோமாளி ஷோ: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களும் ஸ்ட்ரெஸ் பஸ்டராக கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது 5வது சீசன் ஸ்ட்ரெஸ் பூஸ்டராகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கண்டென்டிற்காக இதுபோன்ற செயல்கள் செய்யப்பட்டு வருவதாகவும் ஆனால் இதெல்லாம் ஓவர் என்று கூறும்வகையில் அடுத்தடுத்த முகம் சுளிக்கும் வகையிலான பல விஷயங்கள் இந்த சீசனில் நடந்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இந்த நிகழ்ச்சியிலிருந்து மணிமேகலை விலகும் முடிவை எடுத்துள்ளார்.

மணிமேகலை -பிரியங்கா விவகாரம்: கடந்த எபிசோடில் திவ்யா துரைசாமி நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட் ஆனநிலையில், பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் இந்த விஷயத்தில் தயாரிப்புத்தரப்பு பிரியங்காவிடம் மணிமேகலையை மன்னிப்பு கேட்க சொன்னதாகவும், அப்படியெல்லாம் சுயமரியாதையை இழந்துவிட்டு தன்னால் இருக்க முடியாது என்று சொல்லி மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் அவர் வீடியோ மற்றும் அறிக்கைமூலம் தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்த நிலையில் அவருக்கு ஆதரவாக பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அருவருக்கத்தக்க விமர்சனங்கள்: குறிப்பாக பிரியங்காவின் பர்சனல் வாழ்க்கை குறித்த பல கமெண்ட்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக கூறப்பட்டு வருகின்றன. ஒரு பெண் என்றும் பாராமல் அவரது பர்சனல் விஷயங்களை கேவலமாக பேசி வருவது மிகுந்த கண்டிப்பிற்குரியது என்றும் இதுபோன்ற பிழைப்பு பிழைப்பதற்கு வேறு ஏதாவது செய்யலாம் என்றும் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் தன்னுடைய ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார். யார்மீது தவறு என்பது யோசிக்க வேண்டிய விஷயம் என்றும் தானும் பிரியங்காவிற்கு எதிராகத்தான் பேசி வருவதாகவும் ஆனால் பிரியங்கா அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தாரா என்பது போன்ற கமெண்ட்கள் அருவருக்கத்தக்கது என்றும் ரஞ்சித் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரஞ்சித் கேள்வி: வியூசை ஏற்றுவதற்காக பிரியங்காவின் கேரக்டரையே இப்படி கேவலமாக பேசுவது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். பிரியங்கா தன்னை சரியாக ஆங்கரிங் செய்யவிடவில்லை என்பது மணிமேகலையின் குற்றச்சாட்டு.ஆனால் அவர் கடந்த 4 சீசன்களாக கோமாளியாக இருந்துவிட்டு, இந்த சீசனில்தான் ஆங்கராக வந்துள்ளார். அவர் தன்னுடைய ஆங்கரிங்கில் சில தடுமாற்றங்களை கொண்டுள்ளதாகவும் அதைத்தான் பிரியங்கா ஃபில் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து பேச விட்டால்தானே சிறப்பான ஆங்கரிங்கை தொடர முடியும் என்றும் ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X