மலையாள டிவி சேனலில் ஜட்ஜ் ஆன ஆன்ட்ரியா!
மலையாள டிவி சேனல் ஒன்றின் இசை ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கியுள்ளார் நடிகை ஆன்ட்ரியா.
சினிமாவில் கொஞ்சம் வாய்ப்பு டல் அடித்தால் நடிகைகளுக்கு ஆபத்பாந்தவன் டிவி சேனல்கள்தான். சீரியல், நிகழ்ச்சி தொகுப்பு, ரியாலிட்டிஷோ என களம் இறங்கிவிடுவார்கள்.
ராதிகா, ரம்யாகிருஷ்ணன், சிம்ரன், ரோஜா, என பிரபல நடிகைகள் சின்னத்திரையில் கோலோச்சுகின்றனர். நடிகை பிரியாமணி கூட மலையாள சேனல் ஒன்றின் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கிறார்.அந்த வரிசையில் மலையாள சேனலின் இசை நிகழ்ச்சி ஒன்றின் நடுவராகப் போகிறார் ஆன்ட்ரியா.

தமிழ் சேனல்களில் ஆன்ட்ரிய
நடிகை ஆன்ட்ரியா தமிழ் சேனல்களில் அடிக்கடி தலையைக் காட்டுவார். விஜய் டிவி சூப்பர் சிங்கர், சன்டிவியின் நடனநிகழ்ச்சி என அவ்வப்போது வந்து பாடிவிட்டும், ஆடிவிட்டும் செல்வார் ஆன்ட்ரியா.

பாடகி நடிகை
ஆன்ட்ரியா சிறந்த பாடகி என்பதால் தான் நடிக்கும் படங்களில் மட்டுமல்லாது பிற திரைப்படங்களிலும் பாடியுள்ளார்.

நடுவர் வாய்ப்பு
அவரது பாடும் திறமைதான் டிவி நிகழ்ச்சியில் நடுவர் வாய்ப்பினை பெற்றுக் கொடுத்துள்ளது. மலையாள திரைப்படங்களில் பிரபலமாகியுள்ள ஆன்ட்டிரியா மலையாள சேனல் ஒன்றின் ரியாலிட்டி ஷோ நடுவராகியுள்ளார்.

10 இசைக்குழுக்கள்
இந்த நிகழ்ச்சியில் 10 இசைக்குழுவினர் தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர். நடிகை ஆன்ட்ரியா உடன் சிவமணி, கோபிசுந்தர்,ஜார்ஜ் பீட்டர்,தீபிகா தேவ் ஆகியோரும் நடுவராக பங்கேற்கின்றனர்.


Click it and Unblock the Notifications











