பிக் பாஸ் வீட்டிற்கு போய் அசிங்கப்பட்ட ஆண்ட்ரியா
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற இடத்தில் ஆண்ட்ரியா அசிங்கப்பட்டுள்ளார்.
கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 குழுவை சேர்ந்த பூஜா குமார், ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடகர் சத்யபிரகாஷ் ஆகியோர் பிக் பாஸ் 2 வீட்டிற்கு சென்றனர். அங்கு கமல் ஹாஸன் எழுதிய சாதி மதம் எனும் வியாதியை போக்கிட பாடலை ஆண்ட்ரியாவும், சத்ய பிரகாஷும் பாடினார்கள்.

பாடிய பிறகு தான் அதை எழுதியது கமல் என்று ஜிப்ரான் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கூற ஆண்ட்ரியாவோ அப்படியா, எனக்கே தெரியாது என்றார்.
அவர்கள் பாடலை பாடிய பிறகு அந்தாக்ஷரி விளையாடினார்கள். ஆண்ட்ரியா பாடி முடிக்க அடுத்தவர் த என்ற எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். ஜனனி தில் பர்ஜானே என்று பாடத் துவங்கியதும் ஆண்ட்ரியா குறுக்கிட்டு தமிழ் பாட்டு பாடும்மா என்றார். இது கமல் சார் பாட்டு, தமிழ் பாட்டு தான் என்று கூறி ஆண்ட்ரியாவுக்கு நோஸ்கட் கொடுத்தார் ஜனனி.
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு விஸ்வரூபம் 2 ட்ரெய்லர் போட்டுக் காட்டப்பட்டது. அரசியல்வாதிகள் எல்லாம் நேர்மையாக சமரசம் பேசினாலே தீவிரவாதம் ஒடுங்கிடும் என்று ட்ரெய்லரில் கமல் பேசியதை பார்த்து போட்டியாளர்கள் கை தட்டினார்கள்.


Click it and Unblock the Notifications











