இந்திய வனங்களுக்குள் அழைத்துச்செல்லும் அனிமல் பிளானட்டின் 'யே மேரா இந்தியா..'.

By Mayura Akilan

இந்தியாவின் 67வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதை ஒட்டி அனிமல் பிளானட் தொலைக்காட்சியில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தினமும் இரவு 9 மணிக்கு, 'யே மேரா இந்தியா' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்தியாவின் பல்வேறுபட்ட நிலப்பரப்புகள், எண்ணற்ற வகையான காட்டுயிர்கள், இயற்கை வளங்கள் ஆகியவற்றை இந்தத் தொடரில் காணலாம்.

இமய மலைத்தொடர், ஒரிசாவின் சதுப்பு நிலங்கள், மேற்கு மலைத்தொடர்ச்சி, பாண்டவர் காடுகள் என இந்தியாவின் பலதரப்பட்ட பகுதிகளில் படம் பிடிக்கப்பட்ட தொடர் இது. இந்த தொடர் பார்வையாளர்களை இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளுக்கு அழைத்துச்செல்கிறது.

சிங்கவால் குரங்கு

சிங்கவால் குரங்கு

அபூர்வமான விலங்குகளான சிங்கவால் குரங்கு, மஷீர் மற்றும் முதலைகள், தோல் என்றழைக்கப்படும் காட்டு நாய் உட்பட எண்ணற்ற வகையான விலங்குகள் இந்த தொடரில் தலை காட்டும்.

இமயமலையின் அற்புதம்

இமயமலையின் அற்புதம்

இமய மலையில் உற்பத்தியாகி பாயும் கங்கையில் காணப்படும் மிக அபூர்வ விலங்கான ஆற்று நீர் டால்பின்களையும், காரியல் எனப்படும் முதலை வகையையும் இந்தத் தொடரில் பார்க்கலாம்.

அதிசய ஆடு

அதிசய ஆடு

கடல் மட்டத்திற்கு மேல் 5000 மீட்டர் உயரத்தில் இமயமலையில் வாழும் ஆடு ஆளரவமற்ற இந்தப் பகுதியை தனது வீடாகக் கொண்டிருப்பதையும் கண்டு அதிசயிக்கலாம்.

ராஜஸ்தான் நாகர் விழா

ராஜஸ்தான் நாகர் விழா

ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் நடக்கும் மாபெரும் கால்நடை சந்தையை காணலாம். எட்டு நாட்கள் நடக்கும் நாகர் விழா அப்பகுதி மக்களின் இயற்கையுடன் இணைந்த பாரம்பரிய வாழ்க்கையை விவரிக்கிறது.

எலிகளின் அதிசயம்

எலிகளின் அதிசயம்

ராஜஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் கார்னி மாதா கோவிலுக்கு யாத்திரை செல்கின்றனர். தங்கள் குழந்தைகள் இங்குள்ள எலிகளின் உடலில் மறுபிறப்பு எடுத்திருப்பதாக இந்த மக்கள் நம்புகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X