சூப்பர் சிங்கர் சீசன் 8 கிராண்ட் ஃபினாலே... நடனமாடி அசத்திய அனிருத்
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். பல பாடகர்களை உலகிற்கு அடையாளம் காட்டிய இந்த ரியாலிட்டி ஷோ, தற்போது 8 வது சீசன் தற்போது நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.
பிற்பகல் 3 மணிக்கு துவங்கி, தொடர்ந்து 6 மணி நேர ஷோவாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த போட்டியில் நடுவர்களாக அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், எஸ்பிபி சரண் ஆகியோர் இருந்து வருகின்றனர்.
இதில் இறுதி போட்டியாளர்களாக அபிலாஷ், பரத், அனு, முத்து சிப்பி, ஸ்ரீதர் சேனா, மானசி ஆகியோர் தேர்வாகி உள்ளனர். ரசிகர்கள் அளிக்கும் ஓட்டுக்களின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டியின் சிறப்பு விருந்தினராக ஹிப் ஹாப் தமிழா ஆதி நேற்று கலந்து கொண்டார். இந்நிலையில் இன்றைய இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டார். கையில் வாளுடன் என்ட்ரி கொடுத்த அவர், மாஸ்டர் படத்தில் மாஸ் ஹிட்டான பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடினார்.
இவர்கள் தவிர பிரபல இசை பாடகர்களான சித்ரா, மால்குடி சுபா, அனந்த் வைத்தியநாதன், கல்பனா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 6 மணி நேரம் இந்நிகழ்ச்சி நடைபெறுவதால் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். லேட்டஸ்ட் தகவலின் படி ஸ்ரீதர் சேனாவிற்கு தான் அதிக ஓட்டுக்கள் கிடைத்துள்ளதாம். அதனால் அவர் தான் சூப்பர் சிங்கர் சீசன் 8 டைட்டிலை பெறுவார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











