Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
கிராமத்திற்கே சென்று தாமரையை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்... மலரும் நினைவுகள்!
திண்டுக்கல் : பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக தாமரை செல்வி கலந்து கொண்டார். நாடக கலைஞரான அவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். மேலும் பிக் பாஸ் அல்டிமேட்டிலும் தொடர்ந்து பங்கேற்றார். ஆனால் டைட்டிலை கைவிட்டார்.
கேஜிஎஃப் வெற்றிக்கு இது தான் காரணம்...இப்படியெல்லாம் பண்ணினா ஏன் 1000 கோடி வசூல் ஆகாது

பிக் பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிரபலமான ஷோ பிக் பாஸ். இதுவரை இந்த ஷோவின் 5 சீசன்கள் ஒளிபரப்பாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் ரசிகர்களின் மிகுந்த ஆதரவுடன் நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது. நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.

நாடக கலைஞர் தாமரை
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக திண்டுக்கல்லின் கிராமத்தை சேர்ந்த தாமரை செல்வி கலந்து கொண்டார். நாடக கலைஞரான அவர் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான
ரசிகர்களை பெற்றுள்ளார். தொடர்ந்து சக போட்டியாளர்களுடன் சண்டை, சச்சரவு, சமாதானம், கோபம் என பல உணர்ச்சிகளை அவர் வெளிப்படுத்தினார்.

ரசிகர்களை வென்ற தாமரை
சிறப்பான உணர்வுகளை அவர் இந்த பிக் பாஸ் வீட்டில் வெளிப்படுத்தினாலும் அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை, ஆனால் ரசிகர்களின் இதயத்தை வென்றார். இதையடுத்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அவர் தொடர்ந்தார். இந்த நிகழ்ச்சியின் இடையில் உலக நாயகன் கமல்ஹாசன் வெளியேறினார்.

அல்டிமேட்டிலும் தாமரை
தொடர்ந்து சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில், தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 70 நாட்களை கடந்து 24 மணிநேரமும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியிலும் தாமரை டைட்டிலை வெல்ல முடியவில்லை. ஆயினும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அனிதா சம்பத் சந்திப்பு
இந்நிலையில் தற்போது அவர் திண்டுக்கல்லில் அவரது சொந்த ஊரில் உள்ளார். இதனிடையே அவரை சக போட்டியாளர் அனிதா சம்பத் நேரில் சென்று சந்தித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.