புடுங்கிருச்சு ஆன்ட்டி.. அடடா! நம்ம பிக் பாஸ் அனிதா சம்பத்தா இது? கோவாவுல ஒரே மஜா தான் போல!
சென்னை: செய்திவாசிப்பாளராக இருந்து பிரபலமான அனிதா சம்பத் சில படங்களிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது ஆரி அர்ஜுனன்னுக்கு எதிராக விரலை உயர்த்தி பேசி மாஸ் காட்டிய நிலையில், அந்த வாரத்திலேயே அவர் வீட்டுக்கும் அனுப்பப்பட்டார்.
அழகாக தமிழ் பேசும் அனிதா சம்பத் பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டார். சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலருடன் சண்டை போட்டு விளையாடி வந்த அனிதா சம்பத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் பெருகியது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அதிகமாக ட்ரோல் செய்யவும் பட்டார் அனிதா சம்பத்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. இந்த ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அழகான செய்திவாசிப்பாளர்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்து கொண்ட நிலையில், 4வது சீசனில் ஒரு அழகான செய்திவாசிப்பாளரை உள்ளே அனுப்ப வேண்டும் என நினைத்து அனிதா சம்பத்துக்கு அந்த சீசனில் வாய்ப்புக் கொடுத்தனர். பிக் பாஸ் விளையாட்டை அவரால் முடிந்த வரை ரொம்பவே அழகாக விளையாடி வெளியேறினார்.
கோவா டூர்: அனிதா சம்பத் யூடியூபில் vlog சேனல் ஆரம்பித்து வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் ரசிகர்கள் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் கோவாவுக்கு டூர் சென்ற அனிதா சம்பத் அங்கே வாட்டர் ரைடுகளில் விளையாடிய சாகச வீடியோக்களை வெளியிட்டு லைக்குகளையும் வியூஸ்களையும் அள்ளி வருகிறார்.
புடுங்கிருச்சு ஆன்ட்டி: இந்நிலையில், லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் போட்டில் இருந்து பாராசூட் மூலம் பறக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதற்கு செம சிங்க் கொடுக்கும் வகையில் வடிவேலுவின் ஆண்டனா காமெடியில் வரும் ஆன்ட்டி.. ஆன்ட்டி.. புடுங்கிருச்சு ஆன்ட்டி டயலாக்கை போட்டு அந்த வீடியோவை ரசிக்கும்படி மாற்றி உள்ளார். ஏகப்பட்ட கமெண்ட்டுகள் அனிதா சம்பத்தின் அந்த வீடியோவுக்கு குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











