சன் டிவியில் விஜயதசமிக்கு அஞ்சான்
அஞ்சான் படம் வெளியாகி இரண்டுமாதம் கூட நிறைவடையாத நிலையில் விஜயதசமி விடுமுறைக்கு சன்டிவியில் ஒளிபரப்பாகிறது.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா நடித்த திரைப்படம் அஞ்சான். பயங்கர பில்டப் உடன் சுதந்திரதினத்தன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

அடிவாங்கிய அஞ்சான்
அஞ்சான் திரைபடம் ரிலீஸ் ஆன நாள் முதல் இதுநாள் வரை அதிகம் கலாய்ப்புகளுக்கு உள்ளான படம் அஞ்சான்தான் என்றால் மிகையாகாது. விடாமல் விரட்டி விரட்டி கலாய்க்கின்றனர்.
சன்டிவியில் இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை அதிக விலைகொடுத்து சன்டிவி வாங்கியுள்ளது. அநேகமாக தீபாவளிக்கு ஒளிபரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் 3ஆம் தேதி விஜயதசமி விடுமுறை தினத்தில் ஒளிபரப்புகின்றனர்.
ஆயுதபூஜைக்கு பிரம்மன்
சன் டிவியில் அக்டோபர் 2ஆம் தேதியன்று காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை சிறப்புத் திரைப்படமாக பிரம்மன் படம் ஒளிபரப்பாகிறது.
அதுக்குள்ளேயா?
முன்பெல்லாம் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி 100 நாட்களுக்கு மேல் ஆனால்தான் டிவியில் ஒளிபரப்புவார்கள். ஆனால் அஞ்சான் திரைப்படம் வெளியாகி 50 தினங்கள் கூட முடிவடையாத நிலையில் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ‘சி' சென்டர்கள்தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











