அண்ணா சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் பாருங்க!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அண்ணா. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் வீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுசித்ரா சந்தோஷ். இவருக்கு நேற்று, நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த போட்டோவை சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பகிர்ந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டிலிருந்து ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் தொடர் அண்ணா. இந்த தொடரை துர்கா சரவணன் இயக்கி வருகிறார். இந்த தொடரின் நாயகனாக மிர்ச்சி செந்தில் குமார் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நந்தினி சீரியல் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நித்யா ராம் நடித்து வருகிறார். மேலும், பூவிலங்கு மோகன், ஸ்ரீலேகா ராஜேந்திரன், ப்ரீதா சுரேஷ் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்து வருகின்றனர். தாய் இல்லாத தனது தங்கைகளுக்கு தாய்க்கு தாயாக இருந்து வளர்ந்து வருகிறார் சண்முகம். அண்ணன், தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட இந்த தொடரில் சண்முகத்தின் தங்கையாக அதாவது, மிர்ச்சி செந்திலின் தங்கையாக வீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுசித்ரா.

அண்ணா சீரியல்: தனக்கு பிடித்த போலீஸ் வேலை வேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்து தற்போது, சொந்த ஊரிலேயே போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அந்த தொடரில், கடந்த சில மாதங்களான இவரின் திருமணத்தில் ஏற்படும் தடங்கல் பற்றி தான் ஒளிபரப்பாகி வந்தது. கடைசியில், தன்னுடைய அத்தை மகன் சௌந்தரபாண்டியனின் கடைசி மகன் சிவபாலனுடன் திருமணம் நடந்து முடிந்ததாக கடந்த சில மாதங்களாக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
நிச்சயதார்த்தம்: இந்த நிலையில் தற்போது சுசித்ரா சந்தோஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது தன்னுடைய நீண்ட நாள் காதலரை விரைவில் கரம் பிடிக்க இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்த அண்மையில் நடந்த நிலையில், நடிகை சுசித்ரா அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விரைவில் திருமணம் என பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











