Senior chuties programme: அடடா அண்ணாச்சியை சுத்தமா காமெடி பீஸ் ஆக்கிபுட்டாய்ங்களே!
சென்னை: சன் டிவியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ. ஷோவாக இருந்தாலும் காமெடிக்காக எல்லை மீறிப் போகிறார்களோ என்று முகம் சுளிக்க வைக்காமல் இருக்கும் வரைதான் நிகழ்ச்சிக்கு மதிப்பு.
இதே டிவியின் லொள்ளுப்பா நிகழ்ச்சியின் மூலம் புதிய புதிய காமெடி ஆர்டிஸ்ட்டுகளுக்கு வாய்ப்பு தருவது போல அந்த ஷோ அமைந்து இருந்தது. ஆனால், இதை ஏனோ சன் டிவி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் நிறுத்தி இருக்கிறது.
சன் டிவி ஒன்றை மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும்.காமெடி ரியாலிட்டி ஷோவைப் பார்க்க எல்லாராலும் இரவு 10:30 வரை விழித்திருந்து காமெடி ஜங்க்ஷன் பார்க்க முடியாது. அதனால், ஞாயிறு தோறும் மதிய நேரத்தில் ஒளிபரப்பி வந்த லொள்ளுபா நிகழ்ச்சியை சடாரென சன் டிவி நிறுத்தியது தவறு.

சீரியல் நடிகைகள்
இமான் அண்ணாச்சி கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக குட்டிச் சுட்டீஸ்னு ஒரு நிகழ்ச்சி நடத்திக்கிட்டு இருந்தார்.அது ஒரு மாதிரியா கலகலப்பா போய்கிட்டு இருந்தாலும், சின்ன குழந்தைகளிடம் அண்ணாச்சி ஏதாவது ஒரு கேள்வி கேட்க, எதாவது ஒரு குழந்தை ஏடாகூடமாக பேசிவிட, இது குழந்தையின் அப்பா அம்மாவுக்குள் பிரச்னையை பூதாகரமாக கிளப்பிய நிஜங்களும் உண்டு. அதனால் இந்த காரணத்தாலோ,வேறு காரணத்தாலோ, குட்டிச் சுட்டீஸ் ரியாலிட்டி ஷோவை இரண்டு வருடங்கள் நிறுத்தி வைத்து இருந்தார்கள்.

சீனியர் சுட்டீஸ்
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்து அதே இமான் அண்ணாச்சியை வைத்தே சீனியர் சுட்டீஸ் ரியாலிட்டி ஷோவை வாரம் தோறும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பி வருகிறார்கள். சன் டிவி சீரியல்களில் நடிக்கும் இளம் பெண்கள் கலந்துகொண்டு, அண்ணாச்சியை அவர்கள் கலாய்ப்பதும், அண்ணாச்சி இவர்களை கலாய்ப்பதும் என்று , நிகழ்ச்சி இப்போது நகைச்சுவை எல்லையையும் தாண்டி சில விஷயங்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு கூட போய் விடுகிறது.

ஒரு காதல் ரெண்டு காதல்
சீரியல் நடிகைகள் ஒரு காதல் பிரேக் அப், ரெண்டாவது காதல் ஓடிக்கிட்டு இருக்கு. கல்யாணம் யார் பண்ணிக்கப் போறா... இப்படியே காதலில் போகட்டும்...அப்புறம் பேசிக்கலாம்னு ஓபன் டாக் விடுவது, அதுவும் உலகளாவிய ஊடகத்தில் இதை ஒளிபரப்புவது அநாகரீகமாகத் தெரியவில்லையா? நாளைக்கு அந்த பெண்ணோட பெர்சனல் வாழ்க்கைக்கு ஒரு இடையூறும் வராது என்று உங்களால் உறுதி கூற முடியுமா?

ரசிப்பார்கள் எனும் நினைவு
மக்கள் எதைக் கொடுத்தாலும் ரசிப்பார்கள் என்கிற எண்ணம் சன் டிவிக்கும் வந்தது எப்படி? இமான் அண்ணாச்சி சொல்லுங்ககண்ணே சொல்லுங்க என்று ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடத்திக்கிட்டு வந்தார்.அதில் பொது அறிவும் இருந்தது.பொது மக்களும் கலந்துகொண்டு மகிழ்ந்தார்கள். நிறைய நகைச்சுவைகள் ரசித்து சிரிக்கும்படி இருந்தன. இந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, இப்போது அந்த நேரத்தில் படத்தை ஒளிப்பரப்பி வருகிறது சன் டிவி.
அநியாயத்துக்கு அண்ணாச்சியை இப்படிப்பட்ட காமெடி பீஸாக்கி அவரிடம் சரக்கு இல்லை என்பது போல் செய்து விடாதீர்கள். ரசிக்க முடியவில்லை


Click it and Unblock the Notifications











