For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பழங்குடி இனத்தைச் சேர்ந்த இன்னொரு பிரச்சனை..."தேன்" திரைப்படம் நாளை மாலை கலர்ஸ் தமிழில்

  |

  சென்னை: கலர்ஸ் தமிழில் 'தேன்' திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி ப்ரீமியர்.

  சிறப்பான பாராட்டு பெற்ற இத்திரைப்படத்தினை வரும் ஞாயிறு, மார்ச் 13 நாளை மாலை 5.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டு மகிழுங்கள்

  மிக வேகமாக வளர்ந்து வரும் சேனல் என்ற பெயர் பெற்றிருக்கும் கலர்ஸ் தமிழ், அதன் சண்டே சினி ஜம்போ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மார்ச் 13 அன்று நாளை மாலை 5.30 மணிக்கு பரவலான வரவேற்பை பெற்ற தேன் திரைப்படத்தின் உலக தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்புவதன் மூலம் பார்வையாளர்களுக்கு திரைவிருந்தைப் படைக்க தயாராக இருக்கிறது.

  முதல் ரசிகர் மன்றம் அமைத்த முத்துமணி மரணம்.. போனில் ரசிகரின் மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்முதல் ரசிகர் மன்றம் அமைத்த முத்துமணி மரணம்.. போனில் ரசிகரின் மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினிகாந்த்

  அருள்தாஸ் மற்றும் பவா லட்சுமணன்

  அருள்தாஸ் மற்றும் பவா லட்சுமணன்

  பிரபல இயக்குனர் கணேஷ் விநாயகன் எழுதி, இயக்கி 2021ல் வெளிவந்த சிறப்பான கதைக்களம் கொண்ட தேன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களாக தருண் குமார் மற்றும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' புகழ் அபர்னதி நடித்திருக்கின்றனர். சிறப்பான நடிகர்களாக அறியப்படும் அருள்தாஸ் மற்றும் பவா லட்சுமணன் துணைக் கதாபாத்திரங்களாக இதில் இடம்பெறுகின்றனர்.

  சமுதாயம் சுமத்துகின்ற சுமை

  சமுதாயம் சுமத்துகின்ற சுமை

  தேனீ வளர்ப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் கிராமப்புறத்தைச் சேர்ந்த, கல்வி கற்காத ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் அவர் மீது இந்த சமுதாயம் சுமத்துகின்ற சுமைகளையும், பிரச்சனைகளையும் அவர் எப்படி எதிர்த்து போராடுகிறார் என்ற கருப்பொருளைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் இத்திரைப்படம் விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இச்சிறப்பான திரைக்காவியத்தை கண்டு ரசிக்க மார்ச் 13 ஞாயிறு நாளை மாலை 5.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்.

  பொருளாதார ரீதியில்

  பொருளாதார ரீதியில்

  அழுத்தமான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தேன் திரைப்படம், ஒரு நிஜ வாழ்க்கை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தேனீ வளர்ப்பை தொழிலாக கொண்ட கல்வியறிவில்லாத ஒரு இளைஞனும், ஒரு அரிதான நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள அவரது மனைவி பூங்கொடியின் (அபர்னதி நடிப்பில்) இறப்பை எதிர்கொள்கின்ற, பொருளாதார ரீதியில் பின்னடைவில் இருக்கின்ற ஒரு கணவனுமான வேலுவின் (தருண்குமாரின் நடிப்பில்) கதையை இது சித்தரிக்கிறது.

  பழங்குடி இனத்தைச் சேர்ந்த

  பழங்குடி இனத்தைச் சேர்ந்த

  அவரது இறந்த மனைவியின் சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல வேலு முனைகிறபோது அமரர் வாகனத்திற்கான பணத்தைச் செலுத்த அவரால் இயலாத நிலையில் எழும் உணர்வுகளின் கொந்தளிப்பு மிகச்சிறப்பாக இதில் காட்டப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை பிறர் பெற்றும் அனுபவிக்கும் நிலையில், அவைகளை பெற இயலாத சூழலில் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள் படும் துயரங்களையும், வேதனைகளையும் இது யதார்த்தமாக வெளிப்படுத்துகிறது. அன்பை அடித்தளமாக கொண்டு வாழ்கின்ற ஒரு குடும்பம், வாழ்க்கையின் மிகக்கடுமையான சவால்களுக்கு பலியாகின்ற, மனதைப் பிழியும் இந்த சோகமான கதை, பார்ப்பதற்கும், சிந்தித்து செயல்படுவதற்கும் உரிய ஒரு சிறப்பான திரைப்படம் என்பது நிச்சயம்.

  துயரங்களையும், போராட்டங்களையும்

  துயரங்களையும், போராட்டங்களையும்

  இயக்குனர் கணேஷ் விநாயகன் கூறியதாவது: "திரைப்படத்தில் காட்டப்பட்டவாறு அதே மாதிரியான நிகழ்வுகளை நிஜத்தில் எதிர்கொண்ட தமிழ்நாட்டின் முத்துவன் பழங்குடியினரின் நிஜ வாழ்க்கை கதையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பியதால், தேன் என்ற கதையை எழுதி அதை நான் திரைப்படமாக இயக்கினேன். இக்கதையின் மூலம், சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் பிரிவினரின் சோதனைகளையும், துயரங்களையும், போராட்டங்களையும் குறித்து பார்வையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க நான் விரும்பினேன். தனது ரசிகர்களுக்கு ஆக்கப்பூர்வ தாக்கங்களை உருவாக்குகின்ற கதைகளையும், திரைப்படங்களையும் ஊக்குவிக்கின்ற ஒரு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழில் எனது திரைப்படம் ஒளிபரப்பாவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது"என்றார் .

  English summary
  Another Movie Related to Tribal Caste – Thaen Movie in Colors TV Tommorow
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X