பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் மற்றொரு பிரபலம்...அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை : விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக மற்றொரு பிரபலமும் அறிவித்துள்ளார். இதனால் அவருக்கு பதில் அந்த கேரக்டரில் வேறு ஒருவரை மாற்ற சீரியல் டீம் முடிவு செய்திருக்கிறதாம்.
விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டதட்ட 700 எபிசோட்களை கடந்து இந்த சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாளத்தில் கருத்தமுத்து என்ற பெயரில் சூப்பர் ஹிட்டான இந்த சீரியல் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

நம்பர் ஒன் சீரியல்
இந்த சீரியலில் லீட் ரோலான கண்ணம்மா கேரக்டரில் ரோஷினி ஹரிபிரியனும், பாரதி கேரக்டரில் அருண் பிரசாத்தும் நடித்தார்கள். இவர்கள் இருவரின் காம்போ, தமிழில் இந்த சீரியல் பிரபலமாக மிக முக்கியமாக காரணமாக அமைந்தது. அதிலும் கண்ணம்மா கேரக்டர் பலரின் ஃபேவரைட்டாக இருந்தது. விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியல் என்ற பெருமையை இந்த சீரியல் பல காலமாக தக்க வைத்துக் கொண்டிருந்தது.

விலகிய ரோஷினி ஹரிபிரியன்
ஆனால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக ரோஷினி ஹரிபிரியன் அறிவித்தார். சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாக கூறினார். இதனால் அவருக்கு பதில் விதுஷாஸ்ரீவை கண்ணாம்மா கேரக்டரில் நடிக்க வைத்தனர். ஆனால் புதிய கண்ணம்மாவை ஏற்க ரசிகர்கள் தயங்கியதாலும், கதைக்களம் மாற்றப்பட்டதாலும் இந்த சீரியலை பார்ப்பதையே பலர் நிறுத்தினர். இதனால் சீரியலின் டிஆர்பி மளமளவென சரிந்தது.

விலகும் அடுத்த பிரபலம்
ரோஷினி விலகுவதற்கு சில மாதங்களுக்கு முன் அகில் கேரக்டரில் நடித்த அகிலனும் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகினார். தற்போது மற்றொரு புதிய திருப்பமாக இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அஞ்சலி கேரக்டரில் நடித்து வரும் கண்மணி மனோகரனும் அறிவித்துள்ளார். அவருக்கு பதில் அருள்ஜோதி, அஞ்சலி கேரக்டரில் மாற்றப்பட்டுள்ளாராம். இவர் தற்போது நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடித்து வருகிறார்.

சீரியலை முடிங்க முதல்ல
ஏற்கனவே கதை போரடிப்பதால் இந்த சீரியலை நிறுத்தி விடலாம் என ரசிகர்கள் பலர் கூறி வருகிறார்கள். தற்போது அடுத்தடுத்து கேரக்டர்கள் மாற்றப்படுவதால் ரசிகர்கள் மேலும் சலிப்படைந்துள்ளனர். சீரியலை முடிங்க ஃபஸ்ட். எதற்காக டைம் வேஸ்ட் பண்ணி புதியவர்களை மாற்றுகிறீர்கள் என கேட்டு வருகின்றனர். நினைத்தாலே இனிக்கும் சீரியலில் கல்யாண காட்சிகள் நடப்பதால் அந்த சீரியலில் இருந்து விரைவில் அருள்ஜோதி விலகி விடுவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











