திடீரென தாலியுடன் வந்த பிரபலம்.. அய்யோ வேண்டாம் என கதறி அழுத பிக் பாஸ் அன்ஷிதா.. என்ன ஆச்சு?
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செல்லம்மா' சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை அன்ஷிதா. அழகே அழகு சீரியலில் நடித்து வரும் இவர், விஜய் டிவி கேம் ஷோவில் கலந்து கொண்ட போது, கண் கலங்கி அழுதார்.
'செல்லம்மா' சீரியல் மூலம் பிரபலமான நடிகை அன்ஷிதா, அந்த சீரியல் முடிந்ததும்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் செல்லம்மா சீரியலில் நடித்த போது அர்ணவுடன் இணைத்து பேசப்பட்டார். அர்ணவ், திவ்யா பிரிவதற்கு காரணமே இவர் தான் என சொல்லப்பட்ட நிலையில், இருவரும் ஒன்றாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பேசுபொருளானது. ஆனால், அந்த வீட்டில் இருக்கும் போதே, அர்ணவிற்கும், அன்ஷிதாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டது.

திடீரென அழுத அன்ஷிதா: பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் டிவிகள் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு என்ற சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் 'அழகு மலர்' என்கிற ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இல்லத்தரசிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், அழகே அழகே சீரியல் டீம், விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும், கேம் நிகழ்ச்சியான அண்டாக்கா கசம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது காமெடிக்காக, அன்ஷிதாவை காதலிப்பது போலவும், தாலியுடன் வருவது போல சீன் வந்தது. அதை ஆரம்பித்திலேயே இதுபோன்ற காதல் காட்சி வேண்டாம் என்று அன்ஷிதா கூறினார்.
ஆனாலும், ஸ்டேன்டப் காமெடியன், மற்றவர்களைப்போல நான் உங்களை காதலித்து ஏமாற்ற மாட்டேன் என்று சொல்லி தாலியை காட்ட, ஒருகட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு அன்ஷிதா அழத்தொடங்கிவிட்டார். இதையடுத்து நட்சத்திர இப்படி எல்லாம் விளையாட வேண்டாம், அதை நிறுத்திவிடுங்கள் என ஓடி சென்று அன்ஷிதாவை சமாதானப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், அன்ஷிதா மிகவும் போல்டான பெண் இதற்கு எல்லாம் அழக்கூடாது என்றும், விஜே விஷால் என்ன ஆனார். அவருக்கும் உங்களுக்கும் பிரச்சனையா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











