சொம்பு தூக்கி.. போற போக்கை பார்த்தா காதலர்களை பிரித்து தான் அனுப்புவாங்க போல.. அன்ஷிதா அப்செட்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் டிராமா நடத்தினாலும் வெளியே போன பின்னர் தங்கள் காதலை தொடராமல் பிரேக்கப் செய்து விட்டு வேறு நபர்களை திருமணம் செய்துக் கொண்டதை முந்தைய சீசன்களில் பார்த்துள்ளோம்.
ஒரு சிலர் மட்டுமே வெளியேவும் சென்று தங்கள் காதலை தொடர்ந்து வருகின்றனர். பிக் பாஸ் 2வது சீசனில் திருமணமாகி பஞ்சாயத்தான ஜோடியை உள்ளே விட்டு சேர்த்து வைக்கும் டிராமா நடைபெற்று பலனளிக்காமல் போனது.

இந்நிலையில், காதல் ஜோடிகளை தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் விட்டுள்ள நிலையில், நிகழ்ச்சி முடிந்து போகும் போது அவர்கள் லவ் பேர்ட்ஸாக இருப்பார்களா? அல்லது டிஷ்யூம் டிஷ்யூம் செய்து பிரிவார்களா என்கிற சந்தேகங்களை தற்போது வெளியாகியிருக்கும் புதிய ப்ரோமோ வெளிப்படுத்தியுள்ளது.
3வது ப்ரோமோ: பிக் பாஸ் தமிழ் சீசனின் இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ தற்போது வெளியானது. பிக் பாஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட யார் யாருக்கு என்ன டைட்டில் கொடுக்கலாம் என்றும் வில்லங்கமான டைட்டில் கொடுக்கப்பட்ட போட்டியாளர்களின் ரியாக்ஷன்களை இந்த ப்ரோமோ வெளிக்காட்டியுள்ளது. ஜாக்குலினுக்கு டிராமா குயின் என வந்த உடனே நான் டிராமா குயினா என ஒரு டிராமாவையே அரங்கேற்றி விட்டார்.
சொம்பு தூக்கி: பிக் பாஸ் வீட்டில் சொம்பு தூக்கி எனும் அவார்டை அர்னவ் தனது காதலியான அன்ஷிதாவுக்குத் தர ஆட்டம் சூடு பிடித்துள்ளது. தன்னை பற்றி நல்லா தெரிஞ்சவனே இப்படி ஒரு பட்டம் கொடுக்கிறானே என அர்னவ் செயலை பார்த்து அப்செட் ஆன அன்ஷிதா அழும் நிலைக்கு சென்று விட்டார்.
காதல் பறவை பிரிந்து விடுமா?: மனைவி திவ்யாவை விவாகரத்து செய்து விட்டு அன்ஷிதாவை காதலிக்கத் தொடங்கிய அர்னவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் போது இவரையும் பிரேக்கப் செய்யாமல் இருந்தால் சரி தான் என ரசிகர்கள் கூறுகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருவருக்கும் எதிராக சண்டை மூட்டி விடுவாரோ பிக் பாஸ் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த வாரம் அர்னவ் வெளியேறிவிட்டால் அன்ஷிதா அதன் பின்னர் தனது ஆட்டத்தை சிறப்பாக விளையாடவும் அதிக வாய்ப்புகள் அமையும் என்றும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











