தமிழ் சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராமில் பாலோ பண்ணும் இசைப்புயல்... வேற லெவல்
சென்னை : சினிமாவில் நடிகர், நடிகைகளை பாலோ செய்வது போலவே சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
குறிப்பாக சன் டிவியின் சுந்தரி சீரியல் மிகப்பெரிய ஹிட்டடித்துள்ள நிலையில் அதில் நடித்துவரும் கேப்ரியல்லா செல்லஸ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக காணப்படுகிறார்.
இவர் இன்ஸ்டாகிராமிலும் மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறார்.

சீரியல் நடிகர்கள்
பெரியத்திரையில் நடித்துவரும் நடிகர், நடிகைகளுக்கு எந்த காலத்திலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவர்களை சமூக வலைதளங்களில் பாலோ செய்யும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் தீவிர ரசிகர்களும் உள்ளனர்.

சமூக வலைதளங்களில் பிசி
அவர்களுக்கு தாங்கள் எந்தவகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை சின்னத்திரை நடிகர், நடிகைகளும் நிரூபித்து வருகின்றனர். அவர்களுக்கு இணையாக இவர்களும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

சுந்தரி சீரியல்
இந்த வகையில் சன் டிவியில் சிறப்பான தொடராக காணப்படும் சுந்தரி தொடரில் லீட் கதாபாத்திரத்தில் நடித்துவரும் கேப்ரியல்லா செல்லசுக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காணப்படுகின்றனர். அவரும் பல போட்டோஷுட்களை நடத்தி ரசிகர்களை தொடர்ந்து குஷியாக்கி வருகிறார்.

வெயிட்டான கதாபாத்திரம்
தினந்தோறும் சன் டிவியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் மிகவும் வெயிட்டான கதாபாத்திரத்தில் கேப்ரியல்லா நடித்து வருகிறார். ஐஏஎஸ் ஆகும் கனவுடன் உள்ள அவரது வாழ்க்கையில் திருமணம் ஏற்படுத்தும் திருப்பங்களை மையமாக கொண்டு இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

கேப்ரியல்லாவை பாலோ செய்யும் இசைப்புயல்
இந்நிலையில் இவரை இன்ஸ்டாகிராமில் பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பாலோ செய்கிறார். இதுகுறித்து கேப்ரியல்லா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மானை 6.1 மில்லியன் பேர் பாலோ செய்தாலும் அவர் 64 பேரை மட்டுமே பாலோ செய்கிறார். அந்த வகையில் சிறப்பான கௌரவம் கேப்ரியல்லாவிற்கு கிடைத்துள்ளது.
Recommended Video

கேப்ரியல்லா மகிழ்ச்சி
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள கேப்ரியல்லா, இது பெருமைக்குரிய விஷயம் என்றும் கூறியுள்ளார். சுந்தரி தொடரின்மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த கேப்ரியல்லா இசைப்புயல் மனதையும் கவர்ந்துள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications