சின்னத்திரையில் ஏ.ஆர்.ரகுமான்
1980ம் ஆண்டு தூர்தர்சனில் ஒளிபரப்பான ஒண்டர் பலூன் என்ற தொடரில் நடித்தார் ஏ.ஆர்.ரகுமான். அதன் பிறகு அவர் சின்னத்திரை பக்கம் வரவில்லை.
விளம்பரங்களில் இசையமைத்து பின்னர் 90 களில் ரோஜா படத்தில் அறிமுகமாகி தற்போது உலகப் புகழ் பெற்றுள்ள ஏ.ஆர் ரகுமான், 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி உள்ளார்.
அஷூதோஸ் கவுரிகர் இயக்கும் எவரெஸ்ட் என்ற நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

லகான் ஏ.ஆர். ரகுமான்
அஷூதோஸ் இயக்கிய லகான், ஜோதா அக்பர், ஸ்வதேஷ் ஆகிய படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். அந்த நட்பின் அடிப்படையில் சின்னத்திரைக்கும் இசையமைக்க வந்துள்ளார் ஏ.ஆர். ரகுமான்.

ஒண்டர்பலூன்
இது குறித்து ஏ.ஆர்.ரகுமான் கூறியிருப்பதாவது: ஒண்டர் பலூனுக்கு பிறகு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறேன். சின்னத்தரை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

அஷூதோஸ் படங்களுக்கு
ஹை டெபினிசியனில் ஒளிபரப்புகிறது. அஷூதோஸ் தன் படங்களுக்கு என்னிடம் நல்ல பாடல்களை வாங்கியிருக்கிறார். அவருடன் பணிபுரிவதே நல்ல அனுபவம்.

தீம் மியூசிக்
எவரெஸ்ட் நிகழ்ச்சியின் கான்செப்ட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் தீம் மியூசிக்கை முடித்து விட்டேன் என்கிறார் ரகுமான். ஆஸ்கார் நாயகனின் இசையினை இனி சின்னத்திரையிலும் ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











