Aranmanai kili serial: அரண்மனை கிளி... படும் போராட்டமோ வனத்து கிளி!

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில், பெரிய தொழிலதிபர் மீனாட்சி அம்மா வீட்டுக்கு, அவரின் தோட்டத்து வேலைக்காரரின் மகள் ஜானகி மருமகளாக அர்ஜுனைத் திருமணம் செய்துகொண்டு வருகிறாள்..

அர்ஜுனின் கால் ஒரு விபத்தில் நடக்க முடியாமல் போய் விடுகிறது. எனவே நல்ல பிரில்லியண்ட் பிசினெஸ் மேனான அர்ஜுன், சக்கர நாற்காலியில் வலம் வருகிறான். உண்மையில் ஜானகியின் அக்காவைத்தான் அர்ஜுனுக்கு பேசி முடிக்கிறார்கள்.

என்றாலும், ஒரு விபத்து போல ஜானகி, அர்ஜுன் கல்யாணம் நடக்குது. தன்னால் நடக்க முடியாது என்பதோ, தனது மகனால் நடக்க முடியாது என்பதோ அவர்களுக்கு பெரும் குறையாகத் தெரியவில்லை. ஜானு படிக்காதவள் என்பது மட்டுமே பெரும் குறையாகத் தெரிய இருவருக்கும் டைவர்ஸ் ஏற்பாடுகள் நடக்குது.

மனம் மாறும் அர்ஜுன்

மனம் மாறும் அர்ஜுன்

ஜானுவை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்து மனம் மாறும் அர்ஜூன்,அப்போதுதான் ஜானு தன்னை டைவர்ஸ் செய்தால் வேறு ஒருவனை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்வாள் என்று நினைக்கிறான். அதனால், விவாகரத்துக்கு சம்மதிக்கிறான். என்னதான் அர்ஜுனை விவாகரத்து செய்தாலும்,, அவனை நடக்க வைத்தே தீருவேன் என்று வைராக்கியத்தில் மீனாட்சி அம்மா டெல்லி சென்று இருந்த சமயம் அர்ஜுனுக்கு வைத்தியம் பார்க்க ஒரு ஆஸ்ரமத்துக்கு அழைச்சுட்டு வந்துடறா.

மலை புதை குழி

மலை புதை குழி

ஆஸ்ரமத்தில் வைத்தியர் சுவாமி கேட்கும் மூலிகைகளை எடுத்து வரப்போகும் ஜானு, காடு, மேடு, மலை, முகடு, புதை குழி என்று மாட்டி மூலிகை பறித்து வருகிறாள்.அந்த மூலிகையையும் மீனாட்சி அமமா வந்து தட்டிவிட்டுட்டு போறாங்க. கடைசியில் பாம்புகள் இருக்கும் நாகதேவன் கோயிலுக்கு போயி விளக்கு ஏத்தி வச்சுட்டு வர்றா. அடுத்து நாக தேவர்கள் வாழும் வனத்துக்கு போயி, அங்கு இருக்கும் வாசுகி பாம்புக்கு பூஜை செய்துட்டு வந்துட்டா, அந்த வாசுகி பாம்பு வந்து அர்ஜுனின் கால்களைத் தீண்டும் போது, அர்ஜுன் எழுந்து நடப்பான் என்று சுவாமிஜி கூறுகிறார்.

ஆரம்பம் பூஜை

ஆரம்பம் பூஜை

அம்மனுக்கு பூஜை செய்துகொண்டு இருந்தால், வாசுகி பாம்பு வரும் என்று பூஜை செய்ய, அதற்குள் மீனாட்சி அமமா போலீசில் புகர் கொடுத்து ,பூஜையை நிறுத்தி வைக்க சொல்றாங்க..அவங்க மேல எந்த தப்புமில்லை.பொய்யான ஜோதிடரை வைத்து, அர்ஜுன் வீட்டை விட்டு வெளியில் போனால் ஆபத்து என்பது போல சொல்லிவிட, பயந்துகொண்டுதான் இந்த வேலையை செய்கிறார்கள்.

பெயரில் மட்டும்தான்

பெயரில் மட்டும்தான்

இப்படி அரண்மனை கிளி என்று பெயரில் மட்டும்தான் இருக்கிறது. நடக்கும் சதிகளும், சோதனைகளும் ஜானகி வனத்தில் வசிக்கும் கிளி போல,, இடி, மின்னல் என்று எல்லா சீற்றங்களுக்கும் ஆளாகி தப்பித்து தப்பித்து வருகிறாள். இந்த முறை வாசுகி பாம்புக்கு பூஜை என்று அர்ஜுனும், ஜானுவும் கல்யாணம் செய்து கொள்வது போலவே நடக்க தம்பதிக்குள் அன்யோன்யம் ஊடுருவுகிறது.

பெண்களுக்கு பிடிக்கும் இந்த சீரியல். காட்சிகள் எல்லாம் அபத்தமாக இருக்கும் போது வேறு என்னத்தை சொல்ல?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X