அரண்மனை படத்தை கைப்பற்றிய சன்டிவி
சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி கைப்பற்றியுள்ளது.
ஹன்சிகா, ஆன்ட்ரியா, லட்சுமி ராய், நான், வினய், சந்தானம், கோவை சரளா என நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள பேய் படம் அரண்மனை. காமெடி, கலர்ஃபுல் பாடல்கள் என எல்லாம் சேர்ந்த பிரம்மாண்டமான ஒரு ஜாலியான படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி.

ஒரு பெரிய குடும்பத்துக்கு தங்கள் பூர்வீக கிராமத்தில் இருக்கும் அரண்மனையை விற்பதற்கு முன் கடைசியாக ஒரு முறை அந்த அரண்மனையில் கூடி கும்மாளம் அடிக்கின்றனர். அப்போது அங்கு நடக்கும் ஒரு திகில் சம்பவங்களை காமெடியாக படம் சொல்கிறதாம். இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோதே ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் சுந்தர்.சியின் அரண்மனை படத்தை சன்டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இனி இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக சன்டிவியில் அரண்மனை பேயை ( சாரி படத்தை) பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











