முஸ்லிம்க்கும், நடிகைக்கும் வாடகைக்கு வீடு தரமாட்டேன்னு சொன்னாங்க.. இப்போ சொந்த வீடு - நிஷா எமோஷனல்!
சென்னை: விஜய் டிவி மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்கி பால் காய்த்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதற்கு காரணமாக இருந்த விஜய் டிவிக்கும் தனது ரசிகர்களுக்கும், தமிழ் மொழிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட அறந்தாங்கி நிஷா கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார். மேலும், சில படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். கொரோனா, வெள்ள பாதிப்பு காலங்களில் எல்லாம் கேபிஒய் பாலாவை போலவே இவரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்வார்.

சென்னையில் நடிகை என்பதற்காகவும், முஸ்லிம் என்பதற்காகவும் வாடகைக்கு கூட வீடு கொடுக்காமல் பலர் அலைய விட்ட நிலையில், தற்போது சொந்தமாக சென்னையில் வீடு வாங்கி அதற்கு அப்பா பெயரை வைத்துள்ளேன் என எமோஷனல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் சொந்த வீடு: விஜய் டிவி பிரபலங்கள் வாடகை வீட்டில் இருந்தாலும் கெத்தாக சென்று வர புதிய கார்களை வரிசையாக வாங்கி சோஷியல் மீடியாவில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்த நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்து, மேலும், கொஞ்சம் கடன் வாங்கி வீடு வாங்கத் தொடங்கியுள்ளனர். மணிமேகலை, கேபிஒய் சரத் உள்ளிட்ட விஜய் டிவி பிரபலங்கள் சமீபத்தில் புதிதாக வீடு வாங்கிய நிலையில், அந்த வரிசையில் அறந்தாங்கி நிஷா சென்னையில் ஒரு வீடு வாங்கி பால் காய்ச்சியுள்ளார்.

அறந்தாங்கி நிஷா எமோஷனல் பதிவு: "உங்க எல்லாரோட ஆசிர்வாதத்தோட சென்னை வீடு பால் காய்ச்சியாச்சு. வீட்டுக்கு அப்பாவோட பெயர் தான் வச்சிருக்கேன், நான் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு சென்னையில் சொந்தக்காரங்கன்னு யாரும் கிடையாது, சின்ன வயசுல ஒரு தடவை தான் அப்பா என்ன சென்னைக்கு கூட்டிட்டு வந்தாங்க, அதுக்கப்புறம் நான் எப்ப சென்னைனு சொன்னாலும் இந்தா கூட்டிட்டு போறேன் மா கூட்டிட்டு போறேன்னு என்னை எப்பவும் ஏமாத்திட்டே இருப்பாங்க, திரும்ப நான் சென்னையில பயணிக்கிறதுக்கு காரணம் என்னுடைய அப்பா, அதுக்கு அப்புறம் என்னுடைய தமிழ்.

முஸ்லிம்க்கு வீடு தரமாட்டேன்னு சொன்னாங்க: ஆறு மாசமா சென்னையில வீடு தேடுனப்போ ஆர்டிஸ்ட்டுக்கு வீடு தர மாட்டேன், முஸ்லிம்க்கு வீடு தர மாட்டேன் இப்படி எத்தனையோ விமர்சனங்களை சந்தித்ததுக்கு அப்புறம் குடும்பமா சேர்ந்து சென்னையில் ஒரு வீடு வாங்கிறலாம்னு முடிவு எடுத்து இப்போ வீடு வாங்கியாச்சு, எப்பவுமே எல்லாரும் முன்னாடியும் நம்ம ஜெயிக்கிறதை விட நம்ம எங்க தோக்குறமோ அங்கதாங்க ஜெயிக்கணும், என்னோட வெற்றிக்கு எப்பவுமே என்னுடைய குடும்பமும் என்னுடைய நண்பர்களும் என்னுடைய ரசிகர்களும் என்னுடைய தமிழும் தான் காரணம், எல்லாருக்குமே ரொம்ப நன்றி என்னுடைய வளர்ச்சியை உங்களுடைய வளர்ச்சியா பாக்குறதுக்கும், என்னை எப்பவுமே உங்களில் ஒருத்தியா பார்க்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

பங்களா இல்லை: Adei behindwoods, galata, apram ella social media ku onnu sollanum, na vangunatha bangala ella single bedroom veedu daaaaaaa........ எல்லாத்தையும் விட பெரிய நன்றி இறைவனுக்கும் எனக்கு அதிக வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மட்டும்தான், நன்றி மக்களே! என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











