கண்மணி அன்போடு காதலன்.. கணவருடன் அறந்தாங்கி நிஷா அலப்பறை!

சென்னை : குணா படத்தில் வரும் "கண்மணி அன்போடு காதலன் "என்ற பாடலை அறந்தாங்கி நிஷாவும் அவரது கணவரும் சேர்ந்து பாடி அலப்பறை செய்துள்ளார்.

Recommended Video

Aranthangi Nisha Marriage Video | Nisha & Riyaz

மேலும் பயந்து ஓடாதீங்க , நாங்க ஃபஸ்ட் டைம் ட்ரை பண்ணி இருக்கோம் என்று அந்த வீடியோவில் கீழ் பதிவிட்டு இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், நிஷா நீங்க நல்ல பாடுறீங்க, உங்கள் குரல் மிகவும் ரசிக்கும்படி உள்ளது. நீங்கள் சூப்பர் சிங்கர் போலாமே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

முக்கிய பங்கு

முக்கிய பங்கு

தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஒரு முக்கிய பங்கு விஜய் டிவிக்கு எப்போதும் .விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பெரும் பாலும் வெற்றி தான். இந்த சேனலை பார்த்து பல நிகழ்ச்சிகளை வேறு பெயர் மாற்றி ஒளிபரப்பி வருகின்றன. அந்த அளவிற்கு அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் பல திறமைசாலிகளை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும். பல ஹீரோக்களையும், குணச்சித்திர நடிகர்களை உருவாக்குவதில் விஜய் டிவிக்கு என்றும் ஒரு முக்கிய பங்கு இருக்கிறது .

குணச்சித்திர நடிகர்கள்

குணச்சித்திர நடிகர்கள்

சிவகார்த்திகேயனும் ,சந்தானமும் விஜய் டிவி மூலமாக சினிமா துறைக்கு வந்தது அனைவருக்கும் தெரியும், ஆனால் பலர் குணச்சித்திர நடிகர்களாகவும் பெயர் வாங்கி உள்ளனர். அந்த வகையில் கார்த்தி நடித்த கைதி படத்தில் தீனா நடித்து இருப்பார் ,விஜய் டிவியில் தனது திறமையான பேச்சாலும் சிந்திக்கும் வைக்கும் திறனாலும் அனைவரையும் ஈர்த்தார். விருந்தினராக வரும் அனைத்து செலிப்ரடிஸ்களையும் போன் செய்து கலாய்த்து, வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.

அறந்தாங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா

விஜய் டிவி யில் பல ரியாலிட்டி ஷோஸ் இருந்தாலும் சிரிக்க வைக்கும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலக்கபோவது யாரு .சீசன் 1,சீசன் 2 என்று அடுக்கிக்கொண்டே பல ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. அந்த வகையில் கலக்கபோவது யாரு சீசன் 5யில் முக்கிய பங்காளராக நுழைந்தவர் தான் அறந்தாங்கி நிஷா. தனது பேச்சு திறனால் அனைவராலும் அறியப்பட்டார். எதார்த்தமாக பேசி மக்கள் மனதில் தனி இடம் பிடித்து கொண்டார்.

கவலை இல்லாத சிரிப்பு

கவலை இல்லாத சிரிப்பு

அறந்தாங்கி நிஷா என்று சொன்னாலே தெரியும் அளவிற்கு தன்னைத் தானே கிண்டல் செய்து கொண்டு,எந்தவிதமான வருத்தமும் இல்லாமல் ,தன்னைத் தானே எவ்வளவுக்கு எவ்வளவு கேலி செய்து கொள்ளமுடியுமா அவ்வளவும் செய்து மற்றவர்களை சிரிக்க வைக்கும் ஆற்றல் படைத்த மிக திறமைசாலியான பெண். இவர் சொல்லும் எதார்த்த நகைச்சுவைக்கு சிரிக்காமல் இருக்கவே முடியாது .

கணவருடன் வம்பு

கணவருடன் வம்பு

அறந்தாங்கி நிஷா ஒவ்வொரு மேடையிலும் தான் மட்டுமல்லாமல் தனது கணவரையும் வம்பு செய்து பல சூழ்நிலையில் தன் சொந்த குடும்பத்தையே கேலியும் கிண்டலுமாக பேசி சுற்றி இருப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். அறந்தாங்கி நிஷா தொடர்ந்து இணையதளத்தில் பரபரப்பாக செயல்பட்டு வரும் இவர் டிக் டாக் வீடியோக்கள் மற்றும் விதவிதமான செல்ஃபி ஃபோட்டோக்கள் என இன்டர்நெட் இனியவள் ஆகவலம் வந்து கொண்டிருக்கிறார்.

கண்மணி அன்போடு காதலன்

கண்மணி அன்போடு காதலன்

சமீபத்தில் நிஷா ,குணா திரைப்படத்தில் நாம் அனைவரும் ரசித்த "கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே" என்ற பாடலை தன் கணவரும் சேர்ந்து பாடி இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நிறைய பேர், நிஷா நீங்க நல்ல பாடுறீங்க, உங்கள் குரல் மிகவும் ரசிக்கும்படி உள்ளது. நீங்கள் சூப்பர் சிங்கர் போலாமே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நிஷாவுடன் பாட்டு பாடிய கணவர் கொஞ்சம் கூட சலிக்காமல் சிவாஜி போல கமல்ஹாசன் போல பர்பாமன்ஸ் கொடுக்கிறார். நிஷாவிற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறதோ, அதே அளவிற்கு நிஷாவின் கணவரையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X