தர்பூசணி திவாகர் மோசம்.. பெண்களிடம் அறுவருப்பாக நடந்து கொண்டார்.. அறந்தாங்கி நிஷா வீடியோ
சென்னை: சமூக வலைதளங்கள் மூலம் இணையவாசிகள் மத்தியில் பிரபலமானவர் தர்பூசணி திவாகர். இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், மேலும் பலரது கவனத்தை ஈர்த்தார். அதேபோல் சில படங்களில் ஓரிரு காட்சிகளில் மட்டும் நடித்தும் உள்ளார். இப்படி இருக்கையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 7 கலந்து கொள்ள சென்ற போது அங்கு அவருக்கும் அந்த நிகழ்ச்சியில் இருந்த புகழ், கானா வினோத், மாகாபா ஆனந்த் உள்ளிட்டருக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டதாகவும் அந்த பிரச்னைக்கு மத்தியில் அவர்கள் மூவரும் இணைந்து இவரை தாக்கி விட்டதாகவும் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது இப்படி இருக்கையில், நாங்கள் அவரைத் தாக்கவில்லை, அவரை நிகழ்ச்சிகளில் இருந்து விலக்கியதற்கு காரணம் சக பெண் பிரபலங்களிடம் மிக மோசமாக நடந்து கொண்டார், என்று மாகாபா ஆனந்த், புகழ், கானா வினோத் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இப்படி இருக்கையில் இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்று தர்பூசணி திவாகரிடம் பேட்டி எடுத்த போது அறந்தாங்கி நிஷா தர்பூசணி திவாகருக்கு எதிராக பேசிய வீடியோவை தர்பூசணி திவாகரை பேட்டி எடுத்தவர் காட்ட முயற்சித்த போது, பேட்டியை ரத்து செய்வதாக சொல்லிவிட்டு புறப்பட்டார், அப்போது அவரை வீடியோ எடுத்த கேமராவையும் உடைத்து சேதப்படுத்தினார்.

இந்நிலையில் அறந்தாங்கி நிஷா அந்த வீடியோவில் என்ன பேசினார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இந்நிலையில் அறந்தாங்கி நிஷா பேசிய வீடியோவை பிரபல பிக் பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல் பிரவீன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது அறந்தாங்கி நிஷா பேசிய வீடியோவை பகிர்ந்து, "ஜெயிலுக்கு போக ரெடியா இரு, நாட்களை எண்ணிக்கொண்டே இரு, இன்னொரு ஆடியோ வருகிறது, சம்பவம் லோடிங், உன் கதை முடியும் நேரம் இது" என்று எல்லாம் கேப்ஷன்போட்டுள்ளார்.
அறந்தாங்கி நிஷா அந்த வீடியோவில், "குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் நடைபெற்றது குறித்து திவாகர் வெளியே பேசியது அனைத்தும் உண்மை கிடையாது. திவாகர் எனக்குத்தான் கோமாளியாக வந்தார், வந்தவர் என் தோல் மீது கை போட்டு மிகவும் மோசமாக பேசினார். சுனிதாவிடம் சென்று சுனிதா என்று கத்தினார். அதேபோல் மற்ற பெண் போட்டியாளர்களிடம் மிகவும் அருவருப்பாக நடந்து கொண்டார். இது தொடர்பாக எல்லாம் அவர் வெளியே சொல்லவில்லை.
குறிப்பாக பெண்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் ரொம்ப தவறானது. மாகாபா ஆனந்த் குறித்து அவர் கூறிய விஷயம் 100 சதவீதம் பொய். இது தொடர்பாக விரிவாக பேச வேண்டும் என்றாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருக்கக் கூடிய எல்லா பெண்களுமே தயாராக இருக்கிறோம். தர்பூசணி திவாகர் மீது இதற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த வீடியோவில் அறந்தாங்கி நிஷா பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications