நயன்தாராவே சொல்லிட்டாங்க.. இனி அப்படி கூப்பிடாதீங்க.. அறந்தாங்கி நிஷா அதிரடி முடிவு
சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று யாரும் அழைக்க வேண்டாம் என கூறி நயன்தாரா பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு பலவிதமான சர்ச்சைகளும் எழுந்தன. இவரை போன்றே விஜய் டி.வியின் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷாவை அனவரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைப்பார்கள். ஆனால், அப்படி என்னை யாரும் அழைக்க வேண்டாம் என நிஷா அறிவித்துவிட்டாராம். ஏன் என்று நெருங்கிய வட்டாரங்கள் கேட்டதற்கான காரணத்தையும் அவரே தெரிவித்திருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள அறந்தாங்கியை சேர்ந்தவர் நிஷா. இஸ்லாமிய பெண்ணான இவர், பட்டிமன்ற பேச்சாளராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னர், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்டாண்டப் அப் காமெடி மூலம் பிரபலம் அடைந்தார். பின்னர், அறந்தாங்கி நிஷா என்பது அவருக்கான அடையாளமாக மாறிவிட்டது. பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பிரபலம் அடைந்தார். ராமருடன் சேர்ந்து இவர் செய்த காமெடிகள் மீம்ஸ்களாக வெளிவந்துள்ளன. அந்த அளவிற்கு இவர்களது காம்போவில் வெளியான காமெடிகள் ரகளையாக மாறிவிட்டது.

நிவாரணம்: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டும் கலக்கினார். பின்னர் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக உதவி தேவைப்படுவோருக்கு ஓடோடி உதவி செய்பவர் நிஷா. கொரோனா பாதிப்பு மற்றும் வெள்ள பாதிப்பு காலங்களில் எல்லாம் கேபிஒய் பாலாவை போலவே இவரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தார். புதுக்கோட்டையில் இருந்து நண்பர்களின் உதவியோடு வந்து உதவி செய்வதாக அவரே தெரிவித்தார். இதை நான் பெருமைப்படுத்த வீடியோவில் பதிவிடவில்லை. இதேபோன்று நீங்களும் உதவி செய்ய முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சொந்த வீடு: சென்னையில் ஒரு இஸ்லாமியருக்கு வீடு கிடைப்பது மிகவும் கொடுமையாக இருப்பதையும் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியவர் அறந்தாங்கி நிஷா. முஸ்லீம் என்பதற்காகவே வாடகைக்கு வீடு கொடுக்காமல் என்னை அழைய விட்டனர் என அவரே கண்ணீரோடு தெரிவித்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து சென்னையில் சொந்த வீடு வாங்கினார். அதற்கு தனது அப்பா பெயரையே வைத்தார்.சின்னத்திரை பிரபலங்கள் வீடு வாங்கியதன் வரிசையில் அவரும் இணைந்தார்.
சின்னத்திரை நயன்தாரா: சின்னத்திரையில் காலடி வைத்து படிப்படியாக உயர்ந்து படங்களிலும் நிஷா நடிக்க தொடங்கினார். பலரும் அவரை சின்னத்திரை நயன்தாரா என்றே அழைக்க தொடங்கினர். இந்த புகழ்ச்சியை அவர் ஏற்காவிட்டாலும், நயன்தாரா போன்றே கடினமாக உழைத்து உயரத்தை அடைந்துள்ளார் என்பது உண்மை. நெட்டிசன்கள் அவரை கலாய்த்தாலும் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு பதில் அளிப்பது என் வேலையல்ல என்றும் தைரியமாக பேசியவர் அறந்தாங்கி நிஷா. இவங்க பேசுவதை நிறுத்தமாட்டாங்க அதற்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பட்டம் வேண்டாம்: சமீபத்தில் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்காதீர்கள் என அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபான்று தற்போது அறந்தாங்கி நிஷாவும் தன்னை யாரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். அந்த பட்டப் பெயர் வைத்து அழைக்க வேண்டாம் என்று காமெடியாக அறந்தாங்கி நிஷா தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











