ஆரவுடன் சேராதம்மா, அவர் ஒரு மாதிரி, 'ம.மு.' கொடுப்பார்: யாஷிகாவை எச்சரிக்கும் ஆர்மி
Recommended Video

சென்னை: மருத்துவ முத்தம் புகழ் ஆரவுடன் யாஷிகா இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ரவுண்டு வருகிறது.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இளசுகள் எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆவலுடன் பார்க்க அவர் ஒரு முக்கிய காரணம்.
இந்நிலையில் யாஷிகாவின் ஒரு புகைப்படத்தை பார்த்து அவரின் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆரவ்
யாஷிகாவும், பிக் பாஸ் டைட்டில் வென்ற மருத்துவ முத்தம் புகழ் ஆரவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ரவுண்டு வந்து கொண்டிருக்கிறது.

பார்ட்டி
பார்ட்டி ஒன்றில் யாஷிகாவும், ஆரவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படமாம் அது. அந்த பய நல்லவன் இல்லமா தள்ளியே இரு என்று யாஷிகா ஆர்மிக்காரர்கள் அவரை எச்சரிக்கிறார்கள்.

சித்தப்பா
பொன்னம்பலத்தின் இரண்டாவது மகனும், யாஷிகாவும் ஒரே ஆண்டில் ஒரே தேதியில் பிறந்திருக்கிறார்கள். இதனால் பொன்னம்பலம் யாஷிகாவை தன்னை சித்தப்பா என்று அழைக்குமாறு கூறியுள்ளார். யாஷிகாவோ சித்தப்ஸ் வாங்க பண்ணலாம் சிட்டப்ஸ் என்று கலாய்த்துள்ளார்.

ஆர்மி
இளசுகள் யாஷிகாவுக்கு ஆர்மி துவங்கியதுடன் அவர் திரையில் வந்தாலே குஷியாகிவிடுகிறார்கள். 18 வயது பெண்ணான யாஷிகா ஸ்கூட்டி அல்ல புல்லட் ஓட்டுகிறார் பாய்ஸ்.


Click it and Unblock the Notifications











