naam iruvar namakku iruvar serial: பார்ரா.. கொல்லைப்புறத்துல கள்ள ரொமான்ஸா?!

சென்னை: மாயனுக்கு இப்போதைக்கு முதலிரவு இல்லை.. அரவிந்தும் இன்னும் நாலு நாள் பொறுக்கணுமாம். அப்புறம்தான் முதலிரவுக்கான நேரம் காலம் கூடி வருதுன்னு ஐயர் சொல்லிட்டார்.

Recommended Video

NINI Real Jodi's | Serial Couples | Naam iruvar Namakku iruvar

ஐயர் சொல்லறாருன்னு அமாவாசை காத்து இருக்குமா? நாலு நாள் பொறுக்க முடியாத அரவிந்த், நைசா பெட்ரூமுக்கு போறான். பெட்ரூமில் கும்மிருட்டு கேள்விப்பட்டு இருக்கீங்களா... இங்கே அதே கும்மிருட்டுத்தான்.

கட்டிலில் பொண்டாட்டி தாமரை ஒய்யாரமா படுத்து இருக்க... கிட்டத்துல போயி, கன்னத்துல இச்சு இச்சுன்னு பதிக்க. சீச்சீன்னு கூச்சல்..பட்டுன்னு லைட்டு எரியுது. யார் கத்தினா? யார் லைட்டை போட்டா?

நாம் இருவர் நமக்கு இருவர்

நாம் இருவர் நமக்கு இருவர்

விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தேவி வைக்கும் எக்ஸாமில் பாஸ் பண்ணலேன்ன மாயனுக்கு முதலிரவு கிடையாதுன்னு தேவி சொல்லிட்டா. ஆனா, அரவிந்துக்கும் தாமரைக்கும் முதலிரவு வைக்க இன்னும் நாலு நாள் காத்திருக்கணுமாம்.அது சரி மாயனுக்கு தேவி என்ன டெஸ்ட் வைக்கப் போறா.

ஏபிசி நீ வாசி

ஏபிசி நீ வாசி

படிக்காத மாயனுக்கு படிப்பு சொல்லித் தந்துகிட்டு இருப்பவள் பொண்டாட்டி தேவி. எத்தனையோ நாள் ஏபிசி நீ வாசின்னு தேவி பாடம் சொல்லிக் கொடுக்கப் போகும்போது எல்லாம் மாயன் ரொமான்ஸ் ட்ரை பண்ணி அதிலும் பாஸ் பண்ணலை. இப்போ அந்த பாடத்துக்கான டெஸ்டில் பாஸ் செய்தால்தான் முதலிரவுன்னு தேவி சொல்லிட்டா.

என் பேரு படையப்பா

என் பேரு படையப்பா

என் பேரு படையப்பான்னு மாயன் ஒரு பேக்கை பின்னால் மாட்டிகிட்டு, பாம்பே டாடிகிட்டே பாடம் படிக்க கிளம்பிட்டான். சரி, சின்சியரா படம் படிக்க கிளம்பியும், தேவி அப்போதுதான் வந்து டெஸ்டில் பாஸ் பண்ணலேன்னா கூட இன்னொரு ஐடியா இருக்குடான்னு அவன் கன்னத்தை தன் பக்கம் திருப்பறா. வேணாங்க.. என் மூடை கெடுக்காதீங்கன்னு சொல்லிட்டு வீர நடை போட்டு கிளம்பறான்.

பொறந்தாண்ட ரொமான்ஸ்

பொறந்தாண்ட ரொமான்ஸ்

இரவு தாமரைன்னு நினைச்சது அவள் கன்னத்தில் பதித்த இச்சு அவங்க அம்மா கன்னத்துல பதிஞ்சுருச்சு. அம்மா கத்த, தாமரை லைட்டைப் போட அந்த ரொமான்ஸும் கெட்டுப்போச்சு. இப்போ பொறந்தாண்ட கொல்லை புரத்துல துணி காயப்போட்டு கொண்டு இருந்த தாமரையை கட்டிப்புடிச்சு, இச்சு கொடுக்கப் போன அரவிந்தைத்தான் கொல்லைப்புறத்துல கள்ளத்தனமான ரொமான்ஸா.. இருங்க பாம்பே டாடிகிட்டே சொல்றேன்னு ஸ்கூல் பேக்கை மாட்டிகிட்டு ஸ்கூல் பையன் மாதிரியே போட்டுக்கொடுக்கப் போறான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X