டிவி நிகழ்ச்சியில் சல்மான் கான் மானத்தை வாங்கிய தம்பி
Recommended Video

மும்பை: டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சல்மான் கானின் மானத்தை வாங்கிவிட்டார் அவரின் தம்பி அர்பாஸ் கான்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது தம்பிகள் அர்பாஸ் கான், சொஹைல் கானுடன் சேர்ந்து கபில் ஷர்மா நடத்தும் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

முத்தம்
சல்மான் கான் படங்களில் தனது ஹீரோயின்களுக்கு முத்தம் கொடுக்க மாட்டார். அதிக பட்சமாக நெற்றியில் முத்தமிடுவார். லிப் டூ லிப் காட்சிகளுக்கு பெயர் போன பாலிவுட்டில் சல்மான் மட்டும் சற்று வித்தியாசமானவர். அவர் முத்தக் காட்சிகளில் நடிக்காதது பற்றி பேசினார் கபில் ஷர்மா.
அர்பாஸ் கான்
சல்மானிடம் கபில் கேள்வி கேட்க தம்பி அர்பாஸ் கானோ, அவர் நிஜத்தில் நிறைய முத்தம் கொடுப்பதால் படத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். அய்யோ, அண்ணன் மானத்தை வாங்க வேறு யாரும் வேண்டாம் இவரே போதும். தம்பி பேசியதை கேட்டு சல்மான் சிரித்துக் கொண்டே இருந்தார்.

டிவி நிகழ்ச்சி
முன்பும் கூட காபி வித் கரண் டிவி நிகழ்ச்சியில் அர்பாஸ் தனது அண்ணன், தம்பியுடன் சேர்ந்து கலந்து கொண்டார். அதில் அண்ணன், தம்பிகளில் யாரால் செக்ஸ் இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியும் என்ற சவாலில் ஜெயிக்க முடியாது என்ற கேள்விக்கு அர்பாஸ் சல்மான் கானை பார்த்தார். இந்நிலையில் மீண்டும் சல்மானை காட்டிக் கொடுத்துள்ளார் அர்பாஸ்.

மரியாதை
சல்மான் கான் தனது அம்மா மீது அதிக பாசமும், மரியாதையும் வைத்துள்ளார். அம்மா தனது படங்களை பார்க்கும்போது அதில் முத்தக் காட்சிகள் இருந்தால் மரியாதையாக இருக்காது என்று நினைக்கிறார் சல்மான். அதனால் தான் அவர் முத்தக் காட்சிகளில் நடிப்பது இல்லையாம்.


Click it and Unblock the Notifications











