அர்ச்சனாவும் வடிவும் வயசானவரை இப்படியா....?

சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் மூத்த மருமகள்கள் அர்ச்சனா, வடிவு ரெண்டு பேரும் பாவம் வயசான மாமனாரை ரொம்ப கஷ்டப்படுத்தறாங்க.

கிராமத்தில் வங்கி அதிகாரியாக பணிபுரிந்தவர் ராஜசேகர்.அதாவது மேற்கண்ட இந்த இரண்டு பெண்களின் மாமனார். இவரின் நண்பர் மகள்தான், கடைசி மருமகள் செம்பா.

செம்பாவின் அப்பா இறந்துவிட அடைக்கலம் கொடுப்பதாக தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் ராஜசேகர். காலப் போக்கில் செம்பாவுக்கும், கார்த்திக்குக்கும் காதல் மலர்ந்து கல்யாணமாகி வீட்டின் கடைசி மருமகளாகிடறா செம்பா.

ராஜசேகர் மாமனார்

ராஜசேகர் மாமனார்

கிராமத்து குலசாமி கோயில் திருவிழாவுக்கு குடும்பத்தோடு வந்திருக்கிறார் ராஜசேகர். அப்போது ஒரு வயசானவர் செம்பாவிடம் வந்து உன் அப்பாவை கொன்றவர் உன் மாமனார் ராஜசேகர்தான். இந்த உண்மை உனக்கு தெரியாம மறைச்சுட்டார்.

நீ கேட்டால்

நீ கேட்டால்

இது பத்தி நீ கேட்டால் பதில் சொல்ல மாட்டார் .பயந்துடுவார் பாருன்னு சொல்லிட்டு போயிடறார். செம்பாவும், பெரும் குழப்பத்தில். மாமனார் கொலை செய்திருப்பாரான்னு இருக்க... ராஜசேகரும் ,இனி நான் உண்மையை சொன்னால் நம்புவாளா... கொலை செய்யலைதானே முன்னேயே சொல்லி இருக்கலாமேன்னுதானே செம்பா நினைப்பான்னு குழம்பறார்..

இரண்டு மருமகள்களும்

இரண்டு மருமகள்களும்

இந்த சமயத்தில் மூத்த மருமகள்கள் அர்ச்சனா, வடிவு ரெண்டு பேரும்... மாமா செம்பா அப்பாவை கொலை செய்துட்டதா புருஷன்கிட்ட செம்பா சொல்லி அழுதத்தை நான் கேட்டுட்டேன்க்கா.. நமக்கும் விஷயம் தெரிஞ்ச மாதிரி மாமாவை கொஞ்சம் பயமுறுத்தலாமான்னு திட்டம் போட்டு ரெண்டு பேரும் களத்துல இறங்குறாங்க.

பார்க்க விரும்பலையாம்

பார்க்க விரும்பலையாம்

என்னம்மா இது செம்பா போட்ட காபி மாதிரியே இருக்குதேன்னு மாமனார் சொல்ல, கிழக்கட்டை.. செம்பா செய்தா மட்டும் தனியா தெரியும் இதுக்குன்னு மைண்ட் வாய்ஸ் பேசின வடிவு... ஆமாம் மாமா...செம்பாவுக்கு உங்களை பார்க்க இஷ்டம் இல்லையாம்...அதான் எங்க கிட்ட குடுத்து உட்டான்னு சொல்ல, மாமனார் பாவம் மனசு கஷ்டப்படறார்.

பிபி செக்கப்

பிபி செக்கப்

மாமா உங்களுக்கு முகம் மாறிப் போச்சு மாமா..இருங்க பிபி நார்மலா இருக்கான்னு செக்கப் பண்றோம்னு சொல்லிட்டு, அந்த மிஷின் பாக்சில் செம்பா அப்பா,ராஜசேகர் இருந்த போட்டோவை வச்சு,ராஜசேகர் முகத்தில் மட்டும் கிறுக்கி கொண்டு வர்றாங்க.

வெளியில வந்து

வெளியில வந்து

பிபி மிஷினை வச்சுட்டு,வேணும்னே மருமகள்கள் ரெண்டு பேரும் வெளியில வந்துடறாங்க.மாமனார் யதேச்சையா பார்க்க, போட்டோவில், தன் முகத்தில் மட்டும் கிறுக்கினது பார்த்து பயத்துல மனுஷன் முழிக்கறார்.

வடிவு அர்ச்சனா

வடிவு அர்ச்சனா

வடிவும், அர்ச்சனாவும் வந்து...என்ன மாமா கொலை செய்துட்டு பதுங்கி இருக்கற மாதிரி ரத்தம் இவ்ளோ சூடா ஓடுதுன்னு கேட்கறா....மாமா என்ன நடந்துச்சு மாமான்னு கேட்க... ஒண்ணும் இல்லையேம்மான்னு சொல்றார். இந்த போட்டோ பாருங்க மாமா... உங்க முகத்துல மட்டும் செம்பா இப்படி கிறுக்கி இருக்கான்னு சொல்றா.

மாமனார் உண்மையில் பயங்கர பீதியில் திருட்டு முழி முழிக்கறார். வயசானவர் பாவம் இல்லையா...ஏன் இந்த கொலை வெறி?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X