Don't Miss!
- Finance
கோதுமை, சர்க்கரையை அடுத்து அரிசி ஏற்றுமதிக்கும் தடையா?
- Sports
"ஹர்ஷல் பட்டேல் ஒரு ஜோக்கர்" பதற்ற சூழலிலும் ஆர்சிபி தப்பியதன் வியூகம் என்ன.. டூப்ளசிஸ் கூறிய உண்மை
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கலக்கும் அம்மா பொண்ணு… தொகுப்பாளினி அர்ச்சனாவின் அடுத்த அட்ராசிட்டி!
சென்னை : சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வரும் அர்ச்சனா, தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.
விஜே,ஆர்ஜே,நடிகை என பலவித திறமைகளுடன் மாஸ் காட்டி வருகிறார் அர்ச்சனா.
தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பதை நிரூபிக்கும் வகையில் அவரது மகள் சாராவும் சின்னத்திரையில் தனது தடத்தை பதித்து வருகிறார்.
அட போங்கப்பா.. நான் கனவுலயே வொர்க்கவுட் பண்ணிக்கிறேன்.. பிக் பாஸ் ஷிவானி இப்படி சீட் பண்றாரே!

தொகுப்பாளினி அர்ச்சனா
தமிழில் முன்னணித் தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவியில் இளமை புதுமை, காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்த அர்ச்சனா. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல ஜீ தொலைக்காட்சியில் ஆஸ்தான தொகுப்பாளினியாக வந்து கலக்கினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்
இதையடுத்து, கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு அன்பு தான் எல்லாம்... அன்பு ஜெயிக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்லி மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

சோஷியல் மீடியாவில் சாரா
இடையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார் அர்ச்சனா. அந்த நேரத்தில் அர்ச்சனாவின் மகள் சாரா, அம்மாவின் உடல் நலம் குறித்த தகவல்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார். தற்போதும் சாரா சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிடுவது, ரீல் வீடியோவை பகிர்வது என ஆக்டிவாகவே உள்ளார்.

டாக்டர் திரைப்படத்தில்
அர்ச்சனா அவரது மகள் சாரா இருவரும், சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் அம்மா, மகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் மிகவும் முக்கியமான ரோலில் சாரா நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது.

மகளுடன் அர்ச்சனா
இந்நிலையில், அர்ச்சனா மற்றும் சாரா இருவரும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளனர். அம்மாவும் மகளும் ஒரேமாதிரி உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆனால், என்ன நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள், என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இவர்கள் இருவரும் ஜீ தொலைக்காட்சியில் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.