ரெட் லைட் ஏரியா.. ஒரு மணி நேரத்துக்கு என்ன ரேட்?.. அர்ச்சனா மகள் ஸாராவுக்கு வந்த ஆபாச கமெண்ட்ஸ்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அன்பு கேங்கின் அன்னையாக இருந்த பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் அர்ச்சனாவின் மகள் ஸாராவும் நடித்திருந்தார். அம்மாவை போலவே தொடர்ந்து சோஷியல் மீடியாவில் இன்ஃப்ளூயன்ஸராக மாறியுள்ள ஸாராவுக்கு ஆபாச கமெண்ட்டுகள் வந்த நிலையில், அதை கண்டித்து தற்போது போஸ்ட் ஒன்றை ஸாரா வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அம்மா அர்ச்சனா போட்டியாளராக பங்கேற்ற போதே அவருக்கு எதிராக வந்த ட்ரோல் கமெண்ட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸாரா மற்றும் அர்ச்சனா இணைந்து பிக் பாஸ் கொண்டாட்டத்தில் நாடகம் ஒன்றை போட்டிருந்தனர்.

Archana Chandhoke Zaara Vineet television

அந்த சீசன் டைட்டில் வின்னரான ஆரி அர்ஜுனன் முகம் தெரியாத நபர்களின் மோசமான செயலை கண்டித்தும் பேசியிருந்தார். இந்நிலையில், அதே போன்று முகம் தெரியாத நபர்கள் தனது அப்பா எடுத்த போட்டோக்களை பார்த்து ஆபாச கமெண்ட்டுகள் போட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சோஷியல் மீடியா வரமா? சாபமா?: சமூக வலைதளம் என்பது ஒரு மாபெரும் சக்தி. அறிவியல் வளர்ச்சியின் ஒரு அங்கமாக மாறியுள்ள அதை பல பணக்காரர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என உருவாக்கி மக்களின் நேரத்தை அதில் செலவு செய்ய வைத்து கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். சோஷியல் மீடியா கன்டென்ட் க்ரியேட்டர்கள், இன்ஃப்ளூயன்ஸர்கள் போட்டோக்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு சம்பாதித்து வருகின்றனர். ஆனால், இளைஞர்கள் தான் தங்களின் நேரத்தை நடிகைகளின் போட்டோக்களுக்கு கமெண்ட் போட்டும் லைக்குகளை போட்டும் நடிகர்களுக்காக சண்டை போட்டும் வீணடித்து வருகின்றனர்.

சைபர் புல்லிங்: சோஷியல் மீடியாவில் கவர்ச்சிகரமான உடையணிந்து போட்டோக்களை போட்டு அதன் மூலம் லைக்குகளை அள்ளி அதிக ஈர்ப்பை பெற வைத்து சம்பாதித்து வரும் பெண்களுக்கு ஏகப்பட்ட சைபர் புல்லிங் தொல்லைகளும் தொடர்ந்து வருகின்றன. பப்ளிக் ஐடியுடன் போட்டோக்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் அர்ச்சனாவின் மகள் ஸாராவுக்கு படு ஆபாசமான கமெண்ட்டுகள் குவிந்து வந்த நிலையில், அதுகுறித்து தற்போது ஒரு போஸ்ட்டை போட்டு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

archana chandhoke zaara vineet


ரெட் லைட் ஏரியான்னு கூப்பிடுறாங்க: அர்ச்சனாவின் மகள் ஸாரா தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் ரெட் லைட் ஏரியா, ஒரு மணி நேரத்துக்கு என்ன ரேட், ரோட்டில் நிற்கும் விபச்சாரியை போல இருக்க, என்கூட படுப்பியா என சமீபத்தில் சாலையில் சேலை அணிந்துக் கொண்டு கையில் ஹேண்ட் பேக் வைத்துக் கொண்டு நான் எடுத்த போட்டோக்களை போட்டதற்கு குவிந்த கமெண்ட்டுகள். அரைகுறை ஆடை அணிந்திருந்தால் தான் ஆபாசமாக அந்த இடம் தெரியுது, இந்த இடம் தெரியுதுன்னு பச்சையா பேசுவீங்க, சேலை கட்டி இருந்தால் கூட இப்படியா பண்ணுவீங்க, அந்த போட்டோக்களை எடுத்தது என் அப்பா. நைட் டின்னர் போயிட்டு வரும் போது போட்டோ எடுத்து வெளியிட்டேன். அதற்கு போய் இப்படி கமெண்ட் அடித்தால் உங்கள் வீட்டில் உள்ள பெண்களின் நிலைமை எப்படி இருக்குமோ என நினைக்கவே பயமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

தண்டிக்க வேண்டும்: இதையெல்லாம் அப்படியே கண்டுக்காமல் போய் விடக் கூடாது. உடனடியாக இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும். தப்பா கமெண்ட்டுகளை போடும் முகம் தெரியாத கோழைகளை கண்டுபிடித்து கடுமையான தண்டனை கொடுத்தால் தான் இது முடிவுக்கு வரும் என கொந்தளித்துள்ளார் ஸாரா வினீத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X