பஞ்சுமிட்டாய் சேலை கட்டி.. அர்ச்சனா மாரியப்பனின் அந்த வைரல் போட்டோஷூட்.. மேக்கிங்கே மிரட்டுதே!

சென்னை: வாணி ராணி, அழகு, அழகி, வள்ளி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்களில் அசத்திய சீரியல் நடிகை அர்ச்சனா மாரியப்பன் சமீபத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது ராணி லுக் கவர்ச்சிகர போட்டோஷூட்டால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் தான் இந்த அர்ச்சனா மாரியப்பன். சின்னத்திரையில் சேலை அணிந்து பக்கா ஹோம்லி லுக்கில் தோன்றும் அர்ச்சனா மாரியப்பன், நிஜ வாழ்க்கையிலும், சமூக வலைத்தளங்களிலும் நான் வேறமாறியான ஆள் என்பதை நிரூபித்து வருகிறார்.

Archana Mariyappan latest Queen Themed Photoshoot Making BTS
Photo Credit:

ஸ்லீவ்லெஸ் ராணி லுக்: இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரிப்ஷன் தொடங்கி ஏகப்பட்ட சீரியல் நடிகைகள் எல்லாம் மாதம் வேலையே இல்லையென்றாலும் 4 முதல் 6 லட்சம் வரை சம்பாதித்து வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தனது ஃபாலோயர்களை அதிகரிக்க அர்ச்சனா மாரியப்பன் பார்த்த வேலை தான் இது என்கின்றனர். காந்தாரா 2 படத்தில் ஸ்லீவ்லெஸ் ராணியாக ருக்மிணி வசந்த்தும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை தேவியாக த்ரிஷா வந்தது போலவே ஸ்லீவ்லெஸ் ராணி தோற்றத்தில் மேக்கப் செய்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் அர்ச்சனா மாரியப்பன். ஆனால், அவரது தோற்றத்தை வைத்து ஏகப்பட்ட பாடிஷேமிங் கமெண்ட்டுகளும், கவர்ச்சியைத் தாண்டி ரொம்பவே ஆபாசமாக தெரிகிறீர்கள் போன்ற கடுமையான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

Archana Mariyappan latest Queen Themed Photoshoot Making BTS
Photo Credit:

மேக்கிங் வீடியோ மிரட்டுது: அர்ச்சனா மாரியப்பனின் இந்தத் திடீர் கிளாமர் லுக் இவ்வளவு வைரலாவதற்கு காரணமே அவரது கவர்ச்சியான தேகம் தான் என்கின்றனர். மேலும், போட்டோஷூட்டை தாண்டி அதற்காக அர்ச்சனா மாரியப்பன் எப்படி ரெடியானார் என்பதை பார்க்க விரும்பிய ரசிகர்களுக்கு தற்போது மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டு சும்மா லைக்குகளை குவித்து வருகிறார்.

குவியுது லைக்ஸ்: அர்ச்சனா மாரியப்பனின் இந்த போல்டான போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. ஸ்டூடியோவுக்குள் காடு போன்ற செட்டப்பை உருவாக்கி ஐஸ் ஸ்மோக் எல்லாம் ரெடி பண்ணி செம கிளாமரான உடையில் அர்ச்சனா மாரியப்பனை எப்படி போட்டோஸ் எடுத்தோம் என்கிற வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. அர்ச்சனா மாரியப்பனின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் சும்மா லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X