அர்ச்சனாவின் அதிரடி போஸ்ட்.. "போடாதே போடாதே"... பதறிப் போன மகள் சாரா!

சென்னை: தன் மகளின் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அர்ச்சனா வலைதளங்களில் போட்டோவை பார்த்ததும் பதறி போன அவருடைய மகள் சாரா போட்ட கமெண்ட் வைரலாகியுள்ளது.

ஜீ தமிழில் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்த விஜே அர்ச்சனா இந்த டிவியில் தொகுத்து வழங்காத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தொகுப்பாளர் மட்டுமல்லாமல் விருது வழங்கும் நிகழ்ச்சி களையும் இவர் தொகுத்து வழங்கி தன்னுடைய பேச்சால் ரசிகர்களை கட்டி இழுத்தவர்.

அழகான தொகுப்பாளர்

அழகான தொகுப்பாளர்

தொகுப்பாளராக இவர் இருந்தாலும் பலபேர் மனதில் நல்ல ஒரு இடத்தில் இருந்தவர். ஆனால் திடீரென்று விஜய் டிவியின் நிகழ்ச்சியில் இவர் களம் இறங்கியதும் அனைத்து ரசிகர்களும் ஷாக் ஆகி விட்டனர். ஜீ தமிழில் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பது போல அவருடைய மகளும் அவருடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார்.

அழகு அம்மா

அழகு அம்மா

சூப்பர் மாம் என்னும் நிகழ்ச்சியை அம்மா பொண்ணு இருவருமே சிறப்பாக தொகுத்து வழங்கி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றிருந்தனர் .இந்த நிகழ்ச்சியில் அம்மா அழகா பொண்ணு அழகா என்று பல பேர் பட்டிமன்றமே வைத்திருந்தனர். அந்த அளவிற்கு இருவரும் பேச்சாலையும் அழகாலயும் பம்பரம் போல் சுற்றி வந்தனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நாலாவது சீசனில் இவர் கன்டஸ்டன்ட்டாக அறிமுகமாகும்போது பலர் அதிர்ச்சி அடைந்தனர் .

ரசிகர்களின் செல்லம்

ரசிகர்களின் செல்லம்

இவர் ஜீ தமிழில் செல்லப் பிள்ளையாக இருந்தவர். திடீரென விஜய் டிவி நிகழ்ச்சியை களமிறங்கியிருக்கிறார் என்று தான் பலரும் யோசித்து வந்தனர். ஆனாலும் இந்த வீட்டிற்குள் சென்ற பிறகு இவருக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட் வந்துகொண்டிருந்தன. இந்த வீட்டிற்குள் இவர் அன்பு என்று ஒரு டீம் ஏற்படுத்தி அன்பால் உலகை மாற்றி விடலாம் அனைவரையும் மாற்றலாம் என்று அடிக்கடி பேசிக் கொண்டிருந்தனர் .

அன்புதானே ஜெயிக்கும்

அன்புதானே ஜெயிக்கும்

அன்பு தான் ஜெயிக்கும் என்றும் இவரது தாரக மந்திரமாக இருந்ததால் இப்ப வரைக்கும் இவரை அன்பு டீம் தலைவி என்றுதான் சிலர் கலாய்த்து வருகின்றனர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும்போது அவர் அந்த வீட்டிற்குள் இருக்கும் போது வெளியே அவரைப் பற்றி வரும் நெகட்டிவ் கமெண்ட் களுக்கு அவருடைய மகள் சாரா தக்க பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார் .

சின்னப் பெண் என்றும் பார்க்காமல்

சின்னப் பெண் என்றும் பார்க்காமல்

ஆனாலும் அடங்காத ரசிகர்கள் அவரை ஒரு சின்னப் பெண் என்று கூட பார்க்காமல் திட்டி தீர்த்து வந்தனர். ஆனால் அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இந்த மாதிரி நெகட்டிவ் கமெண்டுகளை கண்டுகொள்ளவே கூடாது என்று தங்களுடைய வழியில் போய்க் கொண்டிருந்தனர் .இந்த நிலையில்தான் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது அந்த நிகழ்ச்சியில் கூட அர்ச்சனாவும் அவருடைய பொன்னான சாராவும் ஜாலியான ஒரு ஃபர்பாமன்ஸ் பண்ணி இருந்தார் .

செம கலாய்

செம கலாய்

இந்த நிகழ்ச்சி கூட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இவர்களிருவரும் பிக் பாஸ் கொண்டாட்டத்தில் டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு கருத்து சொல்ல நினைத்த நிலையில் நெட்டிசன்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொண்டு கலாய்த்து தள்ளி விட்டனர். ஆனால் அதற்கும் சாரா பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் அர்ச்சனா வெளியிட்ட போட்டோஸ்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சீமந்தம்

சீமந்தம்

அர்ச்சனாவின் சகோதரி அனிதா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டாலும் தன்னுடைய மகளின் ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .அதில் தாவாணி போட்டுக்கொண்டு தேவதை போல காட்சியளிக்கும் சாராவின் புகைப்படத்தை தன்னுடைய செல்ல மகள் என்று பதிவிட்டிருந்தார்.

படபடத்த மகள்

படபடத்த மகள்

இந்த போட்டோவை பார்த்ததும் மீண்டும் நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். அர்ச்சனா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து சாரா ரொம்பவே ஷாக் ஆகி விட்டார் .அந்தப் புகைப்படத்திற்கு இந்த போட்டோவை போஸ்ட் போட வேண்டாம் என்று நான் எவ்வளவு கெஞ்சி இருந்தேன் ஆனாலும் இந்த மாதிரி பண்ணி விட்டீர்களே மாதாஜி என்று கமெண்ட் போட்டிருக்கிறார் .தற்போது இந்த போட்டோக்களும் அதற்கு சாரா போட்ட போஸ்ட் தான் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X