Bigg Boss Tamil 7 Title Winner: பிக் பாஸ் தமிழ் 7 டைட்டில் வின்னர் இவங்க தான்?.. தரமான சம்பவம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பது குறித்த தெளிவு கடைசியாக ரசிகர்களுக்கு வந்து விட்டது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர். மேலும், எவிக்ட் ஆன விஜய் வர்மா மற்றும் அனன்யா என இருவரும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர். இந்நிலையில், இந்த சீசன் டைட்டிலை வைல்டு கார்டு போட்டியாளர் தான் தட்டித் தூக்கப் போகிறார் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன.
உலக நயாகன் கமல்ஹாசன் பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து 7வது சீசன் வரை தொகுத்து வழங்கி வருகிறார். எந்த சீசனிலும் அவரது பெயர் இந்த அளவுக்கு டேமேஜ் ஆகவில்லை. இந்த சீசனில் பெண் போட்டியாளர்களுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் விதமாக செங்கொடி கான்செப்ட்டை கொண்டு வந்து பிரதீப் ஆண்டனியை பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து அனுப்பிய நிலையில் தான் கமல்ஹாசனுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இத்தனை வாரங்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வரும் ஆண்டவர் கிராண்ட் ஃபினாலேவையும் அடுத்த வாரம் நடத்த உள்ளார்.

இந்த வாரம் வெளியேறும் மாயா: பிக் பாஸ் வீட்டில் பணப்பெட்டியுடன் பூர்ணிமா ரவி புத்திசாலித்தனமாக வெளியேறிய நிலையில், ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் அந்த ஒரு நபரின் எவிக்ஷன் இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை குறைவான ஓட்டுகளுடன் கடைசி இடத்தில் மாயா தான் உள்ளார் என்றும் இந்த வாரம் அவர் வெளியேறுவது உறுதி என தகவல்கள் வெளியாகி உள்ளன. பலர் கொண்டாட்டத்தையே ஆரம்பித்து விட்டனர்.
டபுள் எவிக்ஷன்: இந்த சீசனில் தான் இதற்கு முன் இல்லாத அளவுக்கு அதிகப்படியான போட்டியாளர்களும், வைல்டு கார்டு என்ட்ரிக்களும் வந்தனர். அதே போல ஜோடி ஜோடியாக டபுள் எவிக்ட் செய்யப்பட்டும் பலர் வெளியேறி உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் பூர்ணிமா போன பிறகும் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்றும் விஜய் வர்மா மற்றும் மாயா எவிக்ட் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது என்கின்றனர்.

டைட்டில் வின்னர் யாரு: இதெல்லாம் இருக்கட்டும் பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை தட்டித் தூக்கப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி யாரு என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த சீசனில் அந்த டைட்டில் விஜே அர்ச்சனாவுக்குத்தான் செல்லப் போவது உறுதியாகி உள்ளது. இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களிலேயே அதிக வாக்குகளுடன் தனியார் கருத்துக் கணிப்புகளில் முதலிடத்தில் அர்ச்சனா தான் உள்ளார். ரன்னர் அப்பாக மணி அல்லது, தினேஷ் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். விசித்ராவுக்கு கடைசி நேரத்தில் ஏற்பட்ட கெட்ட பெயர் காரணமாக டாப் 3 இடத்தில் கூட அவர் வர மாட்டார் என்கின்றனர். அடுத்த வாரம் கிராண்ட் ஃபினாலேவில் ஏதாவது சித்து விளையாட்டு நடக்கிறதா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











