Thirumanam serial: கல்யாணம் உங்களுக்கு விளையாட்டா போச்சா?

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் கல்யாணம் என்பது என்னவோ சின்ன குழந்தைகள் விளையாட்டு மாதிரி சந்தோஷும், ஜனனியும் நினைச்சு அவங்களா ஒரு முடிவு எடுத்து வாழறாங்க.

சந்தோஷ் சக்தின்னு ஒரு பெண்ணை காதலிச்சானாம். அவங்க வீட்டில் பெத்தவங்க சம்மதிக்கலையாம் .அதனால ரெண்டு பேரும் பிரிஞ்சுடறாங்க. சந்தோஷ் வீட்டில் ஜனனியை கல்யாணம் பண்ணி வச்சுடறாங்க.

ஆனா, சக்தி சந்தோஷுக்காக வெளி நாட்டில் காத்துக்கொண்டு இருப்பதாகவும், ஜனனியை டைவர்ஸ் பண்ணிட்டா உன்னோட வந்து வாழறேன்னும் சொல்றா.சந்தோஷுக்கு சக்தியை காதலிச்சுட்டு, ஜனனியோட வாழ முடியலை.

டைவர்ஸ் பேச்சு

டைவர்ஸ் பேச்சு

சந்தோஷ், ஜனனி கல்யாணம் முடிந்து முதன் முதலில் இருவரும் பேசிக்கொண்டது டைவர்ஸ் பண்ணிக்கறது பத்திதான். அதுவும் சந்தோஷ் தன்னால் சக்தியை மறக்க முடியாது. அதனால் நாம ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கலாம்னு சொன்னதால, ஜனனியும் வேற வழி இல்லாமல் ஒத்துக்கறா. அது மட்டுமா, ரெண்டு வீட்டுக்கும் தெரியாமல் வக்கீலை சந்திக்கறாங்க.கோர்ட்டில் கேஸ் நடந்துகிட்டு இருக்கு.

வீட்டு மருமகள் போல

வீட்டு மருமகள் போல

வீட்டில் நிஜமான மருமகள் போலத்தான் ஜனனி நடந்துக்கறா. வீட்டில் எல்லார் மனதிலும் ஜனனி இடம் பிடிச்சுடறா.அவளுக்கு சந்தோஷுடன் வாழ விருப்பம் இருந்தாலும் அதை வெளியில் சொல்ல முடியலை. அவன்தான் எப்போதும் சக்தி சக்தின்னு உளறிக்கிட்டு இருக்கானே..இவ என்ன செய்வா பாவம். பாத்ரூமில் போய் தனியா அழுதுகிட்டு இருப்பா.

வந்துட்டா சக்தி

வந்துட்டா சக்தி

வெளிநாட்டில் இருந்து சக்தி வந்துடறா. நேர ஜனனிக்கு போன் செய்து, டைவர்ஸ் கிடைக்க இவ்வளவு தாமதம் ஆகுது இல்லே.. ஜனனி சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத...நீயா உங்க வீட்டுக்குப் போயிரு.நான் சந்தோஷ் கூட வாழணும்னு சொல்றா.

 நீ யாரு

நீ யாரு

அடி செருப்பால என்னை வீட்டை விட்டு போக சொல்ல நீ யாருன்னு கேட்காம, சரி நான் போயிடறேன்னு சொல்லிடறா. எப்படி மாமனார், நாத்தனார்,கொழுந்தன் எல்லாரும் நம்ம மேல இவ்ளோ பாசமா இருக்காங்க.இதுதான் நம்ம குடும்பம்னு கல்யாணமாகி வந்தாச்சு.அவங்களை எப்படி ஏமாத்திட்டு போக முடியும்னு யோசிக்க வேணாம் ஒரு பொண்ணு? பிறந்த வீட்டில் எல்லாரும் எப்படி கவலைப் படுவாங்கன்னு யோசிக்க வேணாம்?.

ஹார்ட் அட்டாக்

ஹார்ட் அட்டாக்

ஜனனியின் தங்கச்சி அனிதாவின் நிச்சயதார்த்தம் நடப்பதை சாக்கா வச்சு, மொத்தமா கிளம்பிடலாம்னு முடிவெடுக்கறா. பெத்தவங்க வீட்டில் இரவு படுத்து இருக்கும் போது, சந்தோஷுக்கு சக்தி போன் பண்றா. இவன் உடனே கிளம்பிப் போக எங்கே கிளம்பிட்டீங்கன்னு ஜனனி கேட்க சந்தோஷ் சத்தமா பேசி சண்டை மாதிரி வந்துருது. இதை பார்த்த அப்பா மாப்பிள்ளையிடம் விசாரிக்க, மாப்பிள்ளை சண்டை எல்லாம் இல்லை மாமான்னு சொல்லியும் அப்பா மனசு கேட்கலை.

ஜனனியின் அப்பாவுக்கு பொண்ணு வாழ்க்கை சரியாக இருக்கோ இல்லையோ என்கிற கவலையில் ஹார்ட் அட்டாக் வந்துருது. அதுக்குதான் சொன்னது கல்யாணம் உங்களுக்கு விளையாட்டா போச்சான்னு

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X