Eeramana rojave serial: கிணற்று பம்ப்செட்ல தொட்டியில் குளிச்சு இருக்கீங்களா?
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் மலர் கல்யாணம் செய்துகிட்டு போன குடும்பம் பெரிய பணக்கார குடும்பம். அதுவும் விவசாயத்தில் பெரிய ஜமீன் குடும்பம் மாதிரி.
செல்வ செழிப்பான விவசாய நிலங்கள் அந்த குடும்பத்தில் மலரும், தங்கச்சி அகிலாவும் கல்யாணம் செய்துகிட்டு போறாங்க.வெற்றியின் பொண்டாட்டி மலருக்கு அரசு ஆசிரியை வேலை கிடைச்சுருது.
அவள் வேலைக்கு போறான்னு, குடும்பத்துல மாமியார், நாத்தனார் எல்லாரும் எங்கோ வேலைக்கு போறோம்னு போட்டி போட்டுக்கிட்டு வேலைக்குப் போயி இருக்காங்க. வீட்டில் பெண்கள் யாரும் இல்லாத குஷியில் ஆண்கள் எல்லாரும் வயலுக்கு போறாங்க.

பம்செட்டில் குளியல்
முதலில் இரண்டு பேர் பம்செட்டில் அருவி மாதிரி கொட்டும் தண்ணீரில் தொட்டியில் இறங்கி பாட்டு பாட்டிகிட்டே குளிக்கறாங்க. இதைப்பார்த்த பெரியவருக்கு குளிக்கும் ஆசை வந்துருது. வேற்றின அப்பா, ஏலே சென்னையில குடிக்கக் கூட தண்ணி இல்லைன்னு கஷ்டப்படறாங்க.நீங்க என்னடான்னா தண்ணியில கூத்தடிக்கறீங்கன்னு கேட்கறார். சென்னையில் மட்டும் இல்லை, கிராமங்களில் கூட தண்ணீர் இல்லை.

தண்ணீர்தான் வேஸ்ட்
இது வயலுக்கு பாயற தண்ணீர்தான்...வேஸ்டா போற தண்ணீர் இல்லை மாமா...நாங்க குளிச்ச தண்ணீர் வயலுக்குத்தான் போகுது. அதனால, வேஸ்ட்டுன்னு சொல்லாதீங்க. வேணும்னா வந்து குளிக்க சொல்லுங்க. அவங்கதான் சொந்த கிராமத்தை விட்டு வெளியூருக்கு பணம் சம்பாதிக்க போனாங்கன்னு ஒருத்தன் கேட்கறான். இந்த மாதிரி நல்லா வாழணும்னா சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்ய சொல்லுங்கன்னு சொல்றான்.

சென்னையிலும் இருந்ததே
பம்ப்செட் குளியல் மூலமா அவங்க பேசினது எல்லாமே உண்மைதான்னு சொன்னாலும், சென்னையிலும் வயல்வெளி இல்லாமலா இருந்தது.ஏரி ,குளம், குட்டைகள் இல்லாமலா இருந்தது. அதைத்தான் பிளாட் போட்டு வித்துட்டாங்க.இனியாவது திருவள்ளூர், காஞ்சீபுரம் இங்கு இருக்கும் விளை நிலங்களை காப்போம். வாய்ப்பு கிடைத்தால் பம்ப் செட்டில் குளிப்போம்.

விவசாயம் பார்க்க
இப்போது தங்களால் முடிந்தவரை பணம் சம்பாதித்து விட்டு, ஐடி இளைஞர்கள் அருகில் இருக்கும் வயல் வெளிகளை குத்தகைக்கு எடுத்து, இயற்கை உரமிட்டு விவசாயம் செய்யறாங்க. விவசாயத்துக்கு உதவறாங்க. அதனால், பம்ப் செட்டில் குளிக்கும் அனுபவத்தை பெரும்பாலானோர் பெற்று வருகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்வோம்.


Click it and Unblock the Notifications











