ரோஜாவின் கால்களை மடியில் வச்சு.. மெல்ல அமுக்கி.. விரல்களுக்கு சொடுக்கெடுத்து.. !

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் நடிக்கும் வடிவுக்கரசிக்கு ஒரு ஓ போடலாம். வயது பேதமினிறி ரோஜா டீமோடு வடிவுக்கரசி ஒன்றி நடிக்கறாங்க.

நல்ல குணம், அவங்க கம்பீரத்தை பார்க்கையில் அவருடன் பேச யாருக்கும் கொஞ்சம் பயமாதான் இருக்கும். ஆனா, அப்படிப்பட்டவங்க இல்லை, வடிவுக்கரசி. குழந்தை மனசு...

நட்சத்திர ஹோட்டலில் ரிஷப்ஷனிஸ்ட்டா இருந்த வடிவுக்கரசியை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. சிவப்பு ரோஜாக்கள் படத்தில் அதிரடியாக பேசும் பெண்ணாக அருமையாக நடிச்சிருப்பார். ரோஜா சீரியலுக்கு இவர் ஒரு பெரிய ஸ்டார் காஸ்ட்னு சொல்லி அவருக்கு ஒரு ஓ போடலாம்.

ஐஸ்க்ரீம்

ஐஸ்க்ரீம்

டாக்குமென்ட்டை ரோஜாவும், அர்ஜுனும் ஆஸ்ரமத்தில் இருந்து எடுத்துக்கிட்டு வண்டியில வந்துட்டு இருக்காங்க. அப்போ ரோஜா ஐஸ்க்ரீம் வண்டியைப் பார்த்துட்டு, ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா சார்னு கேட்கறா. அர்ஜுனும் அவளை வண்டியில் உட்கார வச்சுட்டு ஐஸ்க்ரீம் வாங்கி குடுக்கறான். அவ அதை ருசிச்சு சாப்பிடுவதை ரசிச்சு பார்த்தவன், அவ கை நிறைய ஐஸ்க்ரீம் வாங்கித் தர்றான். கை நிறைய இருப்பதால், இவன் அவளுக்கு ஐஸ்க்ரீமை ஊட்டி விடறான்.

என்ன பழக்கம்

என்ன பழக்கம்

மருமகளே.. நடுராத்திரியில் யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு வெளியில சுத்திட்டு வரது என்ன புது பழக்கம்...அதுவும் கிரகணம் முடிஞ்ச நேரத்துல.. எல்லாம் சரியாத்தான் நடந்துகிட்டு இருந்துச்சு. புதுசா வந்தவங்களால இப்படி வீடே மாறிப்போச்சுன்னு மருமக கல்பனாகிட்ட சத்தம் போடறாங்க வடிவுக்கரசி.

அர்ஜுன் எங்கே போனீங்க

அர்ஜுன் எங்கே போனீங்க

என்னடா அர்ஜுன் எங்கடா ரெண்டு பேரும் போனீங்க.. இப்படி அவளை கண்ணாடி குத்தற அளவுக்கு. பாரு தூக்கிட்டு வர்ற மாதிரி ஆயிருச்சுன்னு சொல்றா கல்பனா..இல்லைம்மா ரோஜா ஐஸ்க்ரீம் வேணும், உங்களால் இப்போ வாங்கித் தர முடியுமான்னு சவால் விட்டா.. அதான்னு சொல்றான் அர்ஜுன்.

உன் மருமக டிரஸ்ஸு...

உன் மருமக டிரஸ்ஸு...

ஆமாம்.. பதட்டத்துல யாருமே கவனிக்கலை.. மருமகளே உன் மருமக என்ன புதுசா இந்த டிரஸெல்லாம் போட்டு இருக்கான்னு உசுப்பேத்தறாங்க வடிவுக்கரசி. கல்பனா.. அட ஆமா.. ஜீன்ஸ். டாப்ஸ் போட்டு இருக்கான்னு சந்தோஷப்பட.. இல்லை பாட்டி .. இவர்தான் இந்த டிரஸ் போட்டுக்கணும்னு ஆசைப்பட்டார்னு சொல்றா ரோஜா..என்னமோ போங்கன்னு போயிடறாங்க வடிவுக்கரசி.

கல்யாணமே

கல்யாணமே

சுமதிக்கா.. கல்யாணம் பண்ணிகிட்டா பொண்டாட்டி காலை புடிக்கணும்னு கல்யாணமே வேண்டாம்னு சொன்னான் அர்ஜுன். இப்போ பாருங்க ஆசையா பொண்டாட்டி காலை புடிச்சுகிட்டு இருக்கான்னு சொல்றாங்க கல்பனா.

மேல போலாம்

மேல போலாம்

வா ரோஜா.. இங்க இருந்தா இவங்க ஏதாச்சும் பேசிக்கிட்டே இருப்பாங்க...மேலே போலாம்னு ரோஜாவை கூப்பிட. அவளால் நடக்க முடியலை. லபக்குன்னு தூக்கிக்கறான் அர்ஜுன். கல்பனாவும், சுமதியும் வெட்கப்பட்டு ஓடிவிட, நோட்டம் பார்க்க கல்பனாவின் நாத்தனார் யசோதாவும், புருஷன் சோடா புட்டியும் போறாங்க.

சொடக்கு விரல்களில்

சொடக்கு விரல்களில்

ரோஜாவின் கால்களை மடியில் வச்சுக்கிட்டு, கழட்டி வச்சிருந்த மெட்டி, கொலுசு எல்லாத்தையும் போட்டுவிடறான் அர்ஜுன். பின்னர் கால்களை அமுக்கி விடறான்.விரல்களுக்கு சொடக்கு எடுக்கறான். யசோதா சொல்றா நமக்கு கல்யாணமாகி எவ்ளோ வருஷமாச்சு.. ஒரு நாளாவது இப்படி சொடக்கு எடுத்து இருப்பீங்களான்னு சிணுங்கறா..

ரோஜா டூ லேட்

ரோஜா டூ லேட்

அர்ஜுன் தனக்காக எதையும் செய்வான்னு புரிஞ்சுகிட்டு தெரிஞ்சுக்கிட்டும்..இவ்வளவு நாள் சும்மா இருந்தவ ரோஜா. ஏன், இன்னிக்கு ஒரு லாயராக இருந்தும் இவளுக்காக திருட்டு தனமா ஒரு ஆஸ்ரமத்துக்கு போயி டாகுமென்டை, எடுத்துக்கிட்டு, ரோஜாவை பத்திரமாக தூக்கி வந்தவன். இப்போ கால் அமுக்கி விட்டு, சேவை செய்துகிட்டு இருக்கான்.

இப்போதுதான் ரோஜாவுக்கு கண்ணீர் பொத்துகிட்டு வருது.. சார் நீங்க எனக்கு தெய்வம் சார்னு அவன் கையை பிடிச்சுக்கிட்டு கண்ணீர் விடறா.. இது டூ லேட்தானே...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X