கொஞ்சம் தப்பு பண்ணா ஊதிப் பெருசாக்கிடுவாங்க.. பிக் பாஸ் வீட்டில் ரஞ்சித், அர்னவ், அன்ஷிதா பேச்சு!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் காதலருடன் இணைந்து கலந்துக் கொண்ட அன்ஷிதா எவ்வளவு பெரிய நல்லது பண்ணாலும் பெருசா தெரியாது. ஆனால், சின்னதா தவறு செய்தால் அதை ஊதிப் பெருசாக்கிடுவாங்க என பேசியதை பார்த்து நெட்டிசன்கள் அந்த வீடியோ க்ளிப்பை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழாநிகழ்ச்சியுடன் தொடங்கியது. சுமார் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

bigg boss tamil bigg boss tamil 8 arnav 8

இந்த முறை ரசிகர்கள் நன்கு பரிட்சையமான சீரியல் நடிகர்களே போட்டியாளர்களாக உள்ளே நுழைந்துள்ள நிலையில், ஓவர் டிராமாவாக நிகழ்ச்சி ஆரம்பித்துள்ளது. அதிலும், அர்னவ் மற்றும் அன்ஷிதாவை பார்த்தாலே பச்சை மிளகாயை கடித்தது போல ரசிகர்கள் கடுப்பாகி விடுகின்றனர். போதா குறைக்கு தலைவன் ரஞ்சித்தின் அலப்பறைகளும் தாங்க முடியவில்லை என்கின்றனர்.

அன்ஷிதாவை நாமினேட் பண்றேன்: சாச்சனா நாமினேட் ஆகி முதல் நாளிலேயே வெளியேறிய நாமினேஷன் டாஸ்க்கில் முதல் நபராக வந்து நாமினேட் செய்ததே அர்னவ் தான். அதுவும் அவர் யாரை நாமினேட் செய்தார் என்பதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் உனக்கு ஓவரா தெரியலையா என திட்டி வருகின்றனர். தனது காதலி அன்ஷிதாவை தான் அர்னவ் நாமினேட் செய்தார். வெளியே அன்ஷிதாவுக்கு ஏகப்பட்ட புராஜெக்ட்டுகள் கொட்டிக் கிடப்பதாகவும் அவர் பில்டப் கொடுத்து பிக் பாஸிடம் வாங்கியும் கட்டிக் கொண்டார்.

என்ன ஃபீலிங்கு: தாலி கட்டிய மனைவி திவ்யா மற்றும் குழந்தையை கைவிட்டு அன்ஷிதாவுடன் ரொமான்ஸில் ஈடுபட்டு வரும் அர்னவ் முதல் நபராக இளம் பெண் சாச்சனா வெளியேறியதற்கு ஃபீல் செய்ததை பார்த்து பிக் பாஸ் ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். அன்ஷிதாவுடன் இதெல்லாம் ரொம்ப தப்பு என அர்னவ் பேசிய வசனத்தை எல்லாம் பார்த்தால் பின்னாடி சீரியல் போல யாராவது ப்ராம்ப்டிங் செய்றாங்களா என்றும் கேட்கத்தான் தோன்றுகிறது என்கின்றனர்.

bigg boss tamil bigg boss tamil 8 arnav 8

நல்ல கூட்டணி: அன்ஷிதா, அர்னவ் மற்றும் ரஞ்சித் ஆகிய மூவரும் இணைந்துக் கொண்டு நாங்க ரொம்ப நல்லவங்க என்பது போல பேசியதை பார்த்து கடுப்பான ரசிகர்கள் அந்த காட்சிகளை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஊதிப் பெருசாக்கிடுவாங்க: ரஞ்சித் மற்றும் அர்னவ் உடன் அமர்ந்துக் கொண்டு அன்ஷிதா பேசும் போது, நாம எவ்வளவோ நல்லது செஞ்சிருப்போம். அதை பத்தியெல்லாம் யாருமே பேச மாட்டாங்க. ஆனால், ஏதாவது ஒரு சின்ன தப்பு பண்ணியிருப்போம். அதை ஊதிப் பெருசாக்கிடுவாங்க, அப்படிப்பட்ட உலகத்தில் தான் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

ரஞ்சித் ஃபீலிங்: ரஞ்சித் உடனடியாக என் அருகே உட்கார்ந்துக் கொண்டு சிலர் என்னை பற்றியே தப்பா சொல்வாங்க என்றும் பிக் பாஸ் வீட்டுக்குள் அப்படிப்பட்ட மனிதர்களுடன் சேர்ந்து வாழ வேண்டிய சூழலுக்கு தற்போது தள்ளப்பட்டிருக்கிறோமே என்றும் அன்ஷிதாவிடம் சொல்லி ரொம்பவே ஃபீல் செய்துள்ளார். இந்த சீசனில் இந்த கொடுமை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறதே என்றும் அர்னவ் மற்றும் அன்ஷிதா பிக் பாஸ் வீட்டில் இன்னும் என்னவெல்லாம் பண்ண போகிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், இந்த வாரம் ரஞ்சித் வெளியேறினால் சிறப்பான சம்பவமாக இருக்கும் என்றும் கருத்துக்கள் குவிகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X