அருந்ததி.... காப்பை வச்சே கதையை ஓட்டிடலாமா? இதுல கோவை சரளா வேற!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் பரபரப்பான திகில் தொடர் என்கிறார்கள்... குடும்பத்தினர் காப்பு அணிந்திருந்தால் தீயசக்தி அண்டாதாம்....
காப்பை கழட்டி வச்சுட்ட சுலேகாவுக்குள் தீயசக்தி அதாங்க ஆவி புகுந்து எல்லாத்தையும் கொன்னுடுவேன்னு மிரட்டுது.
அவள் கையில் காப்பை அணிவித்த பின், சுய நினைவுக்கு வந்து கோவம் வந்துருது அவளுக்கு. சண்முகம் குடும்பத்தைப் பிடிக்கலை

சூனியக்காரி
உங்களைப் பார்த்தா நல்லவங்க மாதிரியே தெரியலை...வேஷம் போடறீங்க...சூனியக்காரி மாதிரி தெரியறீங்கன்னு சுலேகா ஈஸ்வரி அம்மாவைப் பார்த்து சகட்டு மேனிக்குத் திட்டறா.இந்த குடும்பமே மர்ம குடும்பமா இருக்குன்னு சொல்றா.

விட்டு வா சண்முகம்
என்னை உண்மையா காதலிச்சு இருந்தா இந்த குடும்பத்தை விட்டு வந்துரு சண்முகம்..நான் அமெரிக்காவுக்கே போகப் போறேன்னு சொல்றா.கொஞ்சம் பொறுமையாயிரு சுலேகா..இந்த குடும்பத்துக்கு சாபமிருக்கு.. அதனாலதான் இப்படி நடக்குது. இந்த காப்பு கையில இருந்தா ஒண்ணும் நடக்காதுன்னு சொல்றாங்க..

அய்யயோ சாபமா
அய்யயோ சாபமா..கடவுளே..இனி இந்த வீட்டிலிருக்கவே மாட்டேன்..இந்த காப்பை மறந்து போடலைன்னா என்னோட கதி... வேணாம் நான் கிளம்பறேன்னு கிளம்பறா...இந்த குடும்பத்தை பிடிக்கலை..முக்கியமா சண்முகம் அம்மா நல்லவங்க மாதிரி வேஷம் போடறாங்க... இவங்ககிட்ட என்னவோ மர்மம் இருக்குன்னு சொல்ல, சண்முகத்துக்கு கோபம் வந்துருது.

ஒரு வாரமாகியும்
ஒரு வாரமாகியும் சீரியலுக்கு இன்னும் விளம்பரம் வரலை. மற்ற சீரியலுக்கு சீன்ஸ் போட்டு ப்ரமோ கொடுக்கற மாதிரி இதுக்கும் கொடுக்கலாம்.. இன்னும் கோவை சரளாவை வச்சு பிரமோ போடறது நல்லாவே இல்லை. அதுவும் ஒரே காஸ்டியூம்ல அவங்க வந்து ஒரே மாதிரி பேசறது போரடிக்குது.
காஞ்சன 3 கும் சேர்த்து ப்ரமோஷன் குடுக்க இந்த யுக்தியை செய்யறாங்களா சன் டிவி... நீங்க எதை நினைச்சோ செய்யுங்க..ஆனா,எங்களுக்கு போரடிக்குதே...


Click it and Unblock the Notifications











