Arundhathi serial: தெளிந்த நீரோடை போல இருந்த அருந்ததி... இப்போது!

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் இப்போது தெளிந்த நீரோடை போல ஒளிபரப்பாகி வருகிறது. அருந்ததியின் ஆவி, தெய்வானையுடன் தோழியாகி விடுவது மிக நன்றாக இருக்கிறது.

தெய்வானை முருகன் பக்தை, சண்முகத்துக்கு இவளை கல்யாணம் செய்து வைத்தால்தான், ஈஸ்வரி அம்மாவின் குடும்பத்தில் இருக்கும் துஷ்ட சக்தி, குடும்பத்தை நிம்மதியாக வைக்கும் என்று ஈஸ்வரி அம்மா நினைக்கிறார்கள்.

தெய்வானையை சண்முகத்துக்கு கல்யாணமும் செய்து வச்சுடறாங்க. கல்யாணம் செய்து வைப்பதற்கு முன்பே சண்முகத்தின் உடலில் அருந்ததி ஆவி புகுந்து இருக்கிறது. இதனால் தெய்வானை படும் அவஸ்தைகளை இப்போது,இனி காண்பிப்பார்கள்.

அருந்ததி தெய்வானை

அருந்ததி தெய்வானை

அருந்ததியும் தெய்வானையின் முன் தோன்றி, ஈஸ்வரி அம்மா குடும்ப ஆண்கள், சிலைக்கு கடத்தலில் ஈடுபட்டதைத் தான் பார்த்து விட்டதாகவும், அதனால், அவர்கள் வீட்டு ஆண்கள் இவளை பாலியல் பலாத்காரம் செய்து, கிணற்றில் தள்ளிவிட்ட கொடுமையையும் சொல்கிறாள். அதனால்தான் இந்த குடும்பத்து ஆண்களை பழி வாங்கத துடித்து முதலில் சிக்கிய சண்முகத்தின் உடலில் ஆவியான தான் புகுந்து கொண்டதாகவும் கூறுகிறாள்.தெய்வானை பரிதாபப்பட்டாலும், உன்னை கெடுத்தவன் யார் என்பதை மட்டும்கண்டு பிடித்து அழி. ஆனால், உன்னிடமிருந்து என் புருஷனை காப்பாத்துவேன் என்று சபதம் விடுகிறாள் தெய்வானை.

முருகன் அருளால்

முருகன் அருளால்

தெய்வானைக்கு முருகன் அருள் உள்ளது என்பதால், அருந்ததி ஆவியின் பிடியிலிருப்பதை கோவை சரளான அண்ட் கோவின் மூலம் அறிந்துகொண்ட தெய்வானை,சண்முகம் படும் கஷ்டங்களைத் தாங்க முடியாமல் விரதம் இருந்து கோமா நிலையில் இருந்த சண்முகத்தை, அருந்ததியின் பிடியிலிருந்து காப்பாத்துகிறாள். கோமா தெளிந்த சண்முகத்துக்கு எல்லாம் தெளிந்துவிட, தெய்வானையை திருமணம் செய்துக் கொண்டது நினைவில் இல்லாமல் போய், சுலேகா தன்னை ஏமாற்றியது மட்டுமே நினைவுக்கு வருகிறது.

நான் என்ன மென்டலா

நான் என்ன மென்டலா

இவ என் பொண்டாட்டியா... என்னம்மா சொல்றீங்க, சுலேகா என் மனசுல ஏற்படுத்தின காயமே இன்னும் எனக்கு ஆறலை.நான் எப்படி போயும் போயும் இவளை கல்யாணம் செய்து இருந்திருப்பேன்னு கத்தறான் சண்முகம். இவளை முதலில் வீட்டை விட்டுத் துரத்துங்கன்னு காலையில் வாக்கிங் போனபோது சொன்னேன் இல்லைன்னு கேட்கறான். காலையில நீ வாக்கிங் போனியா... நீ என்ன மென்டலான்னு சித்தி கேட்க ,நான் மென்டலா? அவளை என் பொண்டாட்டின்னு சொல்ற நீங்க எல்லோரும்தான் மெண்டல்னு சொல்றான்.

என்னதான் தாலிக்கு அர்த்தம்

என்னதான் தாலிக்கு அர்த்தம்

தெய்வானை அழுகிறாள், அதனால்தான் பெரிய இடத்திலே எனக்கு கல்யாணம் வேணாம்னு சொன்னேன்.எதை ஆதாரமா காமிச்சாலும் நம்ப மாட்டேங்கறார்.அப்போ நான் கழுத்தில் கட்டி இருக்கும் இந்த தாலிக்கு என்ன அர்த்தம்னு நீங்களே கேட்டு முடிவு செய்ங்கன்னு தெய்வானை அழறா.அப்போது அருந்ததி இவள் கண்களுக்கு மட்டும் தோன்றி,அழாத தெய்வானை, கொஞ்சம் பொறுமையா இருன்னு சொல்றா. நீ பேசாத இந்த விஷய த்தை நான் பார்த்துக்கறேன்னு சொல்ல ,சண்முகம் கேட்கிறான், யாரு அங்க இருக்கா நீ பேசிகிட்டு நிக்கறே.அப்போ நீதான் மெண்டல்னு சொல்றான்.

இப்படி அருந்ததி கதை ரொம்ப பயமுறுத்தும் படி இல்லாமல், கேனத்தனமான நகைச்சுவை இல்லாமல் தெளிந்த நீரோடையாக ஒளிபப்பாக்கிட்டு இருக்கிறது. சபாஷ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X