Arundhathi Serial: பேய் பங்களாவில் மாட்டிக்கிட்டாளே தெய்வானை ஐயோ பாவம்!
சென்னை: சன் டிவியில் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் அருந்ததி சீரியல் கூடிய விரைவில் முடிந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது.
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியை கணக்கில் வச்சுதான் இந்த சீரியலை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
என்றாலும், கணக்கு போட்டது வீணாகாமல் இதுவரை சீரியல் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது.

கோவை சரளாதான்
அருந்ததி சீரியலில் ஸ்டார் காஸ்ட்னு பார்த்தால் முதலில் அருந்ததி பேய்தான். குழந்தைகள் விரும்பி ரசித்து பார்க்கும்படி ஆரம்பத்தில் சீரியல் களைக் கட்டியது. அடுத்து அந்த நேரத்தில் விஜய் டிவி பிக் பாஸ் அறிவிப்பு வர, முன்பே கணக்கு போட்டு வைத்திருந்தது போலவே அதிரடியாக கோவை சரளாவை இறக்கி உள்ளது.

பெண்கள்,பெரியவர்கள்
பெரும்பாலான பெண்கள், குழந்தைகள், பெரியவர்களுக்கு பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் பிடிப்பதில்லை. அதுவும் குழந்தைகளுக்கு சுத்தமாக பிடிப்பது இல்லை.இவர்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்ரவத்தை தூண்டுவதற்காகவே பேய் படங்களில் மிகப் பிரபலமான கோவை சரளாவை இப்போது ஸ்டார் காஸ்ட் ஆக்கி இருக்கிறார்கள்.

பேய் கதையை
என்ன இருந்தாலும் பேய் கதையை ஜவ்வு மாதிரி இழுப்பது என்பதெல்லாம் வேலைக்கு ஆகாத காரியம். அவ்வளவு செலவும் செய்ய முடியாது. சாதாரண சீரியலில் நடிப்பவர்கள் ரெண்டு டேக் வாங்கினால், பேய் கதையில் அதுவும் தீய சக்தி உடலில் புகுந்து போல நடிப்பவர்கள் நாலு டேக் வாங்குவார்களாம். பிறகு எடிட்டிங்கில் அந்த தீய சக்தியை நிழல் போல. புகைபோல காமிப்பதற்கு ரொம்ப மெனக்கெட வேண்டி இருக்கிறதாம். இதிலும் செலவு.

பேய் கதை
மொத்தத்தில் பேய் கதையை சட்டு புட்டுன்னு கிளைமேக்ஸ் கொண்டு வந்து முடிச்சால்தான் அதுக்கு மரியாதை.தீய சக்தி, நல்ல சக்தின்னு நீட்டிச்சு போராட வைக்க முடியாது. தவிர கோவை சரளா போன்ற நடிகைகளுக்கு டிவியில் ரொம்ப நாள் நடிப்பது என்பதெல்லாம் சாத்தியமில்லை.

தெய்வானை பேயுடன்
பேய் பங்களாவில் மாட்டிகிட்டு தவிக்கும் தெய்வானையை காப்பாற்ற வந்தவர்தான் கோவை சரளா. தீய சக்தியை அழிக்க தெய்வானை என்கிற நல்ல சக்தியோடு கோவை சரளா இணைந்து கதையை சக்ஸஸ் ஃபுல்லா முடிச்சுடுவார் என்றே கதைக்குழு விவாதத்தின் படி எண்ணத் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











