அருந்ததி ஆட்டம் ஆரம்பம்... சந்திரமுகி பேய் குரல் மாதிரியே இருக்குதே...!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில், அருந்ததி பேய் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் சண்முகத்தின் காதலி சுலேகா உடம்புக்குள்ள போயாச்சு.
குளியலுக்கு பிறகான டவலில் அப்படியே கீழே இறங்கி வந்தவ முதலில் அட்டாக் பண்ணியது கையில் காப்பு இல்லாமல் இருக்கும் ஈஸ்வரி அம்மாவைத்தான்.
ஆனா, காப்பாத்திட்டாங்க...உங்க குடும்பத்துல யாரையும் விட்டு வைக்கமாட்டேன்னு அருந்ததி பேய் சொல்றது சந்திரமுகி பேய் குரல் மாதிரியே இருக்கு.

சண்முகம் கையில்
ஈஸ்வரி அம்மா வீட்டில் சண்முகத்துக்கும், சுலேகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கையில், சாத்துக்குடி பழம் தடுக்கி சண்முகத்தின் மேல் விழுந்துடறா தெய்வானை.

எல்லாரும் திட்டறாங்க
சண்முகம் தெய்வானையின் இடையைத் தாங்கிப் பிடிச்சு இருக்க, அவள் கைக்குள் இருக்கா. தெய்வானை. ஊர் ஜனமே கூடி இருக்க, எல்லாரும் அவளைத் திட்டறாங்க. இருக்க இடம் குடுத்தா இப்படியா செய்வாங்கன்னு பேசிக்கறாங்க.

வர்றா சுலேகா
சுலேகா கீழே டவலுடன் வர்றா..வரும்போதே காத்து...உய்யின்னு சத்தம்..கதவு அடிச்சுக்குது..மின் விளக்கு ஆடுது...எல்லாரும் பயந்து நிற்க, அப்போதுதான் இந்த குடும்பத்துல இருக்க எல்லாரையும் அழிச்சே தீருவேன்னு சொல்றா சுலேகா

சண்முகம் தெய்வானை
சண்முகம் விரும்பின சுலேகாவுடன் அவனுக்கு நிச்சயதார்த்தம் நடக்குமா ,இல்லை.. ஊரில் ஒன்றாக பழகிய தெய்வானையுடன் நிச்சயதார்த்தம் நடக்குமா என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கு.


Click it and Unblock the Notifications











