நம்பூதிரி அம்மாவையும் கொன்னுருச்சே அருந்ததி பேய்....!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியலில் ஈஸ்வரி அம்மா வீட்டில் .எப்படியோ துஷ்ட சக்தி புகுந்துருச்சுன்னு, அதை விரட்டியடிக்க நம்பூதிரி அம்மா வீட்டுக்கு வர்றாங்க.
சண்முகத்துக்குள்ள இருந்த அந்த அருந்ததி பேய், கடைசியில் நம்பூதிரி அம்மாவையும் கொன்னுருச்சு.
நம்பூதிரி அம்மா சண்முகத்துக்கு உள்ளிருக்கும் துஷ்ட சக்தியை கண்டுபிடிச்சுட்டதும் அந்த பேயால தாங்கிக்க முடியாம அவங்களையம் கொன்னுருச்சு.

குங்குமம் நம்பூதிரி
வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் தான் பூஜையில் வச்சு எடுத்த குங்குமத்தை நெத்தியில வச்சிக்க கூப்பிடறாங்க. ஈஸ்வரி அம்மா முதற்கொண்டு வச்சுக்க... சண்முகம் ஓதுங்கி ஒதுங்கி போகிறான்.திடீர்னு தீப்பிடிக்க வச்சு கவனத்தை திசை திருப்பறான்.இதை எல்லாம் நம்பூதிரி அம்மா கவனிச்சுக்கிட்டே இருக்காங்க.

குழந்தைகள் தெய்வானையுடன்
தெய்வானையுடன் வந்த குழந்தைகளுக்கு புது உடை தரேன்னு ஈஸ்வரியின் ஓரகத்தி அழைச்சுக்கிட்டு போயி ,உடை போட்டவுடன் உடல் அரிக்கற மாதிரி ஏதோ தடவி குடுத்துடறாங்க. குழந்தைங்க அரிப்பு தங்கமா ஓடினதில், பூஜையில் வைத்திருந்த முருகன் சிலை கீழே விழுந்துருது.

அபசகுனம் இது
இது அபசகுனம்னு ஈஸ்வரி அம்மாவின் ஓரகத்தியும், கொழுந்தனும் பிள்ளைகளைத் திட்ட ஈஸ்வரி அம்மா ஒண்ணுமே பேசாம நிக்கறாங்க. பூஜையிலிருந்த விபூதியை எடுத்து குடுத்து குழந்தைகளின் உடம்பில் பூசிக்க அழுதுகிட்டே சொல்றா.

குத்தம் இதிலும்
இதிலும் குத்தம் கண்டு பிடித்த ஓரகத்தி, கொழுந்தனின் பேகிசுக்களைப் பொறுத்துக்காத தெய்வானை...அம்மா என்னை மன்னிச்சுருங்க அம்மா... என்னோட முருகன் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதாலதான் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிச்சேன் .இப்போ முருகன் சம்மதம் தரலைன்னு நினைச்சுக்கறேன்...இந்த கல்யாணம் வேண்டாம்மான்னு சொல்லிட்டு போறா.

பார்த்தால் இங்கே
தெய்வானை கீழே இறங்கி வந்து கொண்டு இருக்க, இங்கே ஈஸ்வரி அம்மாவின் அண்ணன் பூபதி ஜமீன் கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கார் .சண்முகம் அருந்ததியாக மாறி நம்பூதிரி அம்மாவை கொன்றதை கண்டுபிடிச்சுட்டேன். இதை ஈஸ்வரிகிட்ட சொல்ல போறேன்னு சொல்லி கிளம்பினதுதான் பூபதி அய்யாவின் இந்த நிலைமைக்கு காரணம்.


Click it and Unblock the Notifications











