Roja serial:வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைச்சு போட்டானே....!

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் அஷ்வின் காதலிக்கும் பூஜாவின் அம்மாவும், அப்பாவும், அஷ்வினை மாப்பிள்ளை கேட்டு, அன்னபூரணி அம்மா வீட்டுக்கு வர்றாங்க.

அந்த சமயத்தில் அனுவுக்கும் அஷ்வினுக்கும் கல்யாணம் நிச்சயம் செய்துட்டு, கல்யாண மண்டபம் ஃபிக்ஸ் பண்ண போறாங்க. அப்போது இப்படி குறுக்கே வந்து நிக்கறாங்க பூஜாவின் அம்மாவும், அப்பாவும்.

நான் உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்...உன் பொண்ணுக்கு பூஜான்னு பேர் வச்சேன்.வேலை செய்த இடத்தில பணத்தை கையாடல் பண்ணிட்டேன்னு தனியா பிசினெஸ் வச்சு கொடுத்தேன்னு அன்னபூரணி அம்மா கத்தறாங்க.

விளையாட்டுக்கு பொய்

விளையாட்டுக்கு பொய்

அஷ்வினிடம் பூஜா என்னோட நண்பர் பொண்ணுதான், உனக்கு எப்படியாவது அவளை கல்யாணம் செய்து வைக்கறேன்னு சொல்லி, அவள் தன் பெண் இல்லை என்பது போல விளையாட்டுக்கு பொய் சொல்ல, அதை நம்பி அப்பாவின் நண்பரும், பூஜாவின் அப்பாவுமான அங்கிளிடம் காதலுக்கு அடிக்கடி உதவி கேட்கறான். அவரும் தன் பெண்ணை காதலிக்கவே அஷ்வினுக்கு ஐடியா கொடுக்கிறார்.

அர்ஜுன் ரோஜா

அர்ஜுன் ரோஜா

அண்ணன் அர்ஜுனிடமும், அண்ணி ரோஜாவிடமும் காதலிக்கும் பூஜாவைப் பற்றி சொன்னானே தவிர,அவர் அவள் அப்பா, அம்மா பற்றி அவனும் சொல்லவில்லை.அப்பாவின் நண்பர் இந்த காதலுக்கு உதவியதையும் சொல்லவில்லை. ஆனால், அனுவை தனக்கு பிடிக்கவில்லை, இந்த கல்யாணம் நடக்க கூடாது, எனக்கும், பூஜாவுக்கும்தான் கல்யாணம் நடக்கணும்னு அண்ணன்கிட்டயும், ரோஜாகிட்டயும் வேண்டுதல் வைத்திருக்கிறான்.

அஷ்வின் பிரதாப்

அஷ்வின் பிரதாப்

அர்ஜுனின் அப்பா பிரதாப் உடனே அஷ்வினுக்கு போன் செய்து, அஷ்வின் நீ என் நண்பன் பொண்ணை காதலிக்கிறியான்னு கேட்கறார். இல்லையப்பா, அந்த அங்கிளோட பொண்ணை நான் பார்த்தது கூட கிடையாதுன்னு சொல்லி, அப்பா நான் பிசியா இருக்கேன்னு சொல்லி போனை வச்சுடறான்.பார்த்தீங்களா... உன் பொண்ணை என் பையன் பார்த்தது கூட இல்லையாமேன்னு பிரதாப் சொல்றார். நான் அஷ்வின் கிட்ட பூஜா என் பொண்ணுன்னு சொல்லவே இல்லை.அவனுக்கு சர்ப்ரைஸ் தரலாம்னுதான் இப்படி நேரில் வந்தேன்னு சொல்ல சொல்லக் கேட்காமல் அவரை அவமானப்படுத்தி அனுப்ப முயற்சிக்க அர்ஜுன் வந்துடறான்.

நில்லுங்க அங்கிள்

நில்லுங்க அங்கிள்

நில்லுங்க அங்கிள்... பூஜாவை லவ் பண்றேன்னு அஷ்வின் என்கிட்டே சொல்லி இருக்கான். ஆனா, அவ உங்க பொண்ணுன்னு எனக்கும், அவனுக்கும் தெரியாது. இந்த கல்யாணத்தை நான்தான் நடத்தி வைக்கணும்னும் என்கிட்டே அஷ்வின் கேட்டு இருக்கான். அவன் எனக்கு தம்பி, நான் பிறந்த இடத்தில்தான் அவன் பிறந்தான். நான் குடிச்ச எச்ச பாலைத்தான் அவன் குடிச்சு வளர்ந்தான்.அதனால, அவன் கல்யாணத்தை நடத்தி வைக்க எல்லா உரிமையும் எனக்கு இருக்கு. இருங்க அங்கிள் நாம பேசலாம்னு சொல்றான்.

ஆனாலும் அப்பா கேட்கும் போதே நான் பூஜாவை லவ் பண்றேன்னு சொல்லி இருந்தால், அன்னபூரணி அம்மாவிடம் இப்படி அவமானப்பட வேண்டி இருக்காதே... அதான் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைஞ்ச கதைன்னு சொல்லுவாங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X