»   »  அசோகவனம்… அஜய்யிடம் இருந்து தப்புவாளா சிநேகா?

அசோகவனம்… அஜய்யிடம் இருந்து தப்புவாளா சிநேகா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அசோகவனம் தொடர் 200 அத்தியாயங்களைத் தாண்டி அடுத்தகட்ட பரபரப்பில் நுழைகிறது. பெண்களுக்கு பிடித்தமான சீரியல் என்றாலே அது 500 எபிசோடுகளை எப்படியும் தொட்டுவிடும்.

அதுபோலத்தான் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘அசோகவனம்' தொடர் தற்போது திடீர் திருப்பங்களுடன் 200 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிறது. இந்தத் தொடரில் ரிஷி, சுஜிதா, சுபாஷினி, சத்தியசாய், பவானி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

அஜய் வில்லத்தனம்

அஜய் வில்லத்தனம்

அபலை பெண்களை திருமணம் முடித்து அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்லும் அஜய், அங்கிருக்கும் கோடீஸ்வரர்களுக்கு அவர்களை விருந்தாக்கும் கொடூரபுத்தி கொண்டவனாக இருக்கிறான்.

தப்பிய சிநேகா

தப்பிய சிநேகா

அவனிடம் இருந்து கடுமையாக போராடி இந்தியா வருகிறார் சினேகா. தன்னிடம் இருந்து தப்பிய சினேகாவை பழிவாங்குவதற்காக இந்தியாவுக்கு வருகிறான் அஜய்.

கடத்தப்பட்ட அஜய்

கடத்தப்பட்ட அஜய்

சினேகாவை மிரட்டும் அஜய் திடீரென காணாமல் போகிறான். அமெரிக்காவில் இருந்து வரும் அவனது பெற்றோர், அஜய்யை சினேகா கடத்தியதாக நினைத்து கொடுமைப்படுத்துகிறார்கள்.

ஷாலினியின் பிடியில்

ஷாலினியின் பிடியில்

இந்த நேரம் அஜய்யை கடத்தியது ஷாலினி என்பது சினேகாவுக்குத் தெரியவருகிறது. ஷாலினியின் பிடியில் இருக்கும் அஜய்யை சந்திக்கிறாள் சினேகா.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

ஷாலினியின் நோக்கம் என்ன, அஜய்யை சினேகா காப்பாற்றினாளா அல்லது பழி வாங்கினாளா என்பதை நோக்கி விறுவிறுப்பாக தொடர் நகர்கிறது.

விறுவிறுப்பான தொடர்

விறுவிறுப்பான தொடர்

புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘அசோகவனம்' தொடர் மறுநாள் பகல் 12.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.

English summary
Ashokavanam is the story of a woman, who is married, sent off to a foreign country where she realizes that all that glitters is not gold. Sneha, played by actress Sujitha is married to an Indian Businessman in USA played by Rishi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil