Roja serial: ஒரு வழியா ஐ லவ் யூ சொல்லிக்கிட்டாங்கப்பா!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ராஜாவுக்கும், அர்ஜூனுக்கும் ரெண்டு முறை கல்யாணம் செய்தும்,ஐ லவ் யூ சொல்லிக்கலை. இது ஒரு கவலையா இருக்கு அவங்களுக்கு.
அர்ஜுனுக்கு பொண்ணுங்க... காதல், கல்யாணம் இதெல்லாம் பிடிக்காது. வீட்டுல கல்யாணம் செய்துக்கோன்னு அதுவும் அக்கா பொண்ணு அணுவை கல்யாணம் செய்துக்க சொல்லி பாட்டி வற்புறுத்தறாங்க.

இதில் இருந்து தப்பிக்க அர்ஜுன் தன கிளையன்டான ரோஜாவை கல்யாணம் செய்துகிட்டு, வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடறான்.
ரோஜா,அர்ஜுன் அக்கா பொண்ணு அணு சாக்ஷி எல்லாருமே அனாதை ஆஷ்ரமத்தில் வளர்ந்தவங்க ரோஜாவோட எவிடென்ஸை அணு எடுத்துக்கிட்டு வந்து அர்ஜுன் அக்கா மகள் நான்தான்னு செட்டிலாகிடறா. ஆனா, ரோஜா ஆஷ்ரமம் கேஸ் முடியற வரைக்கும் இந்த வீட்டில் அர்ஜுன் பொண்டாட்டியா ரோஜா வாழ்ந்தாகணும். ஆனால், போகப்போக அர்ஜுனுக்கு ரோஜா மேல் காதல் வந்துருது. ரோஜாவுக்கு அர்ஜுனை பிடிச்சு போனாலும், இதெல்லாம் நமக்கு குடுத்து வைக்கலைன்னு ஒதுங்கிக்கறா.

ரோஜா அர்ஜுன் கல்யாணம் ஒரு வருஷ கான்டராக்ட் கல்யாணம்தான்னு அத்தைக்கு தெரிஞ்ச உடனே ரோஜா வீட்டை விட்டு போயிடறா. அப்போதுதான் ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு இருக்கும் காதல் புரியுது வீட்டுக்கு வந்து மறு தாலியும் கட்டியாச்சு.ஆனால், இன்னமும் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருக்கும் காதலை வெளியில் சொல்ல முடியாம தவிக்கறாங்க. காரணம் ரோஜாவுக்கு தான் அனாதைதானே... எப்படி இந்த வாழ்க்கையை ஏத்துக்கறதுன்னு நினைப்பு. அர்ஜுனுக்கு அவளே சொல்லட்டும்னு எதிர்பார்ப்பு.

ரோஜா அர்ஜுனுக்காக முருகன் கோயிலுக்கு நேர்ந்துக்கிட்டு, விரதமிருந்து காவடி எடுத்து, நடை பயணமா கோயிலுக்கு போறா. குடும்பமே கூட்
போகுது.அப்போ அவளுக்கு நீர் மோரில் விஷம் கலந்து குடுத்துடறாங்க. அப்போ சாக கிடக்கும் ரோஜாவுக்காக முருகன் கோயிலில் தவம் கிடக்கான்.ரோஜா கண் விழிச்சுட்டான்னு கேள்விப்பட்ட உடனே ஒடி வர்றான். ரோஜா ஐ லவ் யூ மாமான்னு சொல்லி கட்டிக்கறா. இவனும் ஐ லவ் யூ ரோஜான்னு கத்தி சொல்லி கட்டிக்கறான். அப்பா ஒரு வழியா திருமணமான ஜோடி ஐ லவ் யூ சொல்லிக்கிட்டாங்கப்பா.

சரி..அது என்ன ஒரு தடவைக்கு இரண்டு தடவை கல்யாணமாக்கிருச்சு..சேர்ந்து படுக்காம மனசு ஒப்பாம இருந்துட்டு, இப்படி ஐ லவ் யூ சொன்னா எல்லாம் உள்ளுக்குள்ள பொங்குதுன்னு அர்த்தமா? ஒண்ணும் புரியலையே...


Click it and Unblock the Notifications











