Magarasi Serial: ப்பா.. ஒரு வழியா புருஷன் பொண்டாட்டி பார்த்துக்கப் போறாங்க!
சென்னை: சன் டிவியின் மகராசி சீரியலில் இந்தா அந்தான்னு இழுத்துகிட்டு இருந்த புவி, பாரதி சந்திப்பு இன்னிக்கு கிட்டத்தில் வந்து இருக்கு. இனியும் சீனை இழுக்க முடியாது...திங்கள் கிழமை எபிசோடில் சந்திச்சுக்குவாங்க.
புருஷன் புவிதான் ஆஸ்பிடலில் இருக்கான்னு தெரியாமலே பாரதி அவனுக்கு மருத்துவ உதவி செய்யறா. யாருதான் அந்த பேஷண்ட் என்று பார்க்கலாம்னு போறப்போ.. டிரஸிங் செய்ய நர்ஸ் ஸ்க்ரீனை போட்ருவாங்க.
சரி, மாமியார் மாமனாரோட அந்த பேஷண்டை பார்த்துட்டு வரலாம்னு போனா, பாரதியின் எதிரி, அவன் முகத்தில் அடிச்சு அடையாளம் தெரியாத மாதிரி கட்டுப் போட வச்சுடறான். இப்படியே கதை நீண்டு போச்சு.

பாரதியின் குரல்
பாரதி வந்துட்டு போனால், கையில் பக்தி கயிறு கட்டிவிட்டுப் போனால், பேஷண்ட் உடல் நிலையில் மாற்றம் தெரியுதுன்னு நர்ஸ் போன் பண்ணி சொன்னதும், ஓடி வந்து பார்க்கறாங்க.. பாரதி மற்றும் மாமியார் மாமனார். ஆனால், பாவம் புருஷன் புவிதான் அந்த பேஷண்ட் என்று தெரியாமல் பாரதி இருக்கிறாள். இதைத்தான் சீரியல் பார்ப்பவர்களால் தாங்கிக்க முடியலை.

கலர்ஃபுல் காட்சிகள்
மகராசி சீரியல் ஆரம்பத்தில் சினிமா பார்க்கற மாதிரி கலர்ஃபுல்லா இருந்துச்சு காட்சிகளும், லொக்கேஷன்களும் அப்படி இருந்தன. ஹரித்வார் காட்சிகள் பிரமாதமாக இருந்தது. அடுத்து நார்மலாக காட்சிகள் இருந்தாலும் கலர்ஃபுல்லாகத்தான் இருந்தது.இப்போது ரொம்ப நார்மலா கதையும், காட்சிகளும் இருப்பதாகவே தோன்றுகிறது.

நடிகர் ரியாஸ்கான்
நடிகர் ரியாஸ்கான் மகராசி சீரியலில் வில்லனாக நடித்து இருக்கார். இதனால் கதை கூடுதலான வெயிட்டுடன் இருக்குமோ என்று நினைத்தால், ஆனால், ரொம்ப சாதாரண ஆட்கடத்தல் வில்லனாகத்தான் இருக்கார்.. இதிலும் ஏமாற்றம்தான். மகராசி சீரியலின் பெண் வில்லியாக இருக்கும் நடிகை அஸ்வினி வில்லத்தனமே தேவலாம் என்று ஆகிவிடுகிறது.

ஒருவர் முகத்தை ஒருவர்
இப்படி இழுவை... போரிங் என்று இருந்த சீரியலில் இப்போதுதான் பாரதியும், புவியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கற மாதிரியான சூழ்நிலை வந்து இருக்கு. இவங்க புவியைத் தேடித் போறாங்க. புவி தப்பிச்சு ரியாஸ்கானுக்கு பயந்து ஒளிஞ்சு ஒளிஞ்சு கடைசியில் பாரதியின் மாமனார் அதாவது தனது அப்பாவின் கார் டிக்கியில் ஒளிஞ்சுக்கறான். பாரதி ஹேண்ட் பேக்கை எடுக்க டிக்கியைத் திறக்கப் போகையில் முடிச்சுட்டாங்க. கண்டிப்பா பார்த்துக்குவாங்க.


Click it and Unblock the Notifications











